பக்கம்:துணிந்தவன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் $99 சொன்ன உங்களுக்கு இப்ப ஒரு வழியும் புலப்பட வில்லையோ?" என்று கேட்டுவிட்டு, அவள் இ.... ஹி.... ஹி' என்று இளித்தாள். அப்பொழுது பளிச்சிட்ட அழகான அரிசிப் பல் வரிசையும் மென்மையான இனிய உதடுகளும் - அவற்றை அவன் எங்கே பார்த்திருக்கிறான்? எங்கே பார்த்தான்? கையால் தன் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண் 超-ff@浜f. 'நீ... நீ வந்து...." அவன் படும் வேதனையைக் கண்டு அவள் கும்மாளி யிட்டுச் சிரித்தாள். பின் "பேபி" என்று அறிவித்தாள்.

"பேபி? பாலச்சந்திரன் அக்காளா? தாங்க முடியாத ஆச்சரியம் ஏற்பட்டது அவனுக்கு. அவன் முகபாவத்தைக் கண்டு குதுகலம் எய்தி னாள் அவள். காலைப் பொன் வெயிலில் மினுமினுக்கும் புது மலர் போல் குளுமையும் வனப்பும் பெற்றுத் திகழ்ந்த பேபியை வியப்புடன், ஒரே பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனால் நம்பவே முடிய வில்லை. "பேபியா அட, என்னமா வளர்ந்துட்டே' “எத்தனையோ வருஷங்கள் ஆச்சுதே, இன்னுமா நான் சின்னப் பெண்ணாக இருப்பேன்! என்று கூறிச் சிரித் தாள் பேபி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/111&oldid=923470" இலிருந்து மீள்விக்கப்பட்டது