பக்கம்:துணிந்தவன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4C2 துணிந்தவன் 'நான் சொல்றதைக் கேளு முதல்லே. உங்க அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சதும் அவங்க கோபிப் பாங்க. சண்டை பிடிப்பாங்க. சின்னப் பெண்ணை இவன்...." பேபி அவசரமாகக் குறுக்கிட்டாள்: "நான் ஒண்ணும் சின்னப்பெண் இல்லே, எனக்கு பதினெட்டு வயசுக்கு மேலேயே ஆயிட்டுது. என் இஷ்டம் போல் நடந்து கொள்ள எனக்கு உரிமை உண்டு.” 'இருக்கட்டும். அதற்காக, உன்போன்ற நல்ல பெண் வீணாக நாசமாக வேண்டுமா? பேபி, நான் சொல் வதைக் கேள், சினிமா உலகம் உனக்குச் சரிப்படாது. நீயோ அருமையான ரோஜாப்பூ மாதிரி இருக்கிறே. இங்கே உள்ள காற்று பட்டாலே வாடி வதங்கிவிடுவே: கசங்கி உருக்குலைந்து போவாய்....' அவன் பேச்சை, கசப்பு மருந்தைக் குடிக்கும் குழந்தை மாதிரி முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு கேட்டு நின்றாள் பேபி. அவளுக்கு அந்த உபதேசம் பிடிக்கவில்லை என்பதை அவள் முகமே விளம்பரப் படுத்தியது. அவள் அவன் அருகில் வந்து நின்றாள். நான் உங்களைப் பற்றி நினைத்தது தவறுதான் போலிருக்கு என்றாள். பெருமூச்செறிந்தபடி தரையைப் பார்த்துப்பொழுது போக்கினாள் பேபி. அவள் போக்கு அவனுக்கு வேடிக்கையாகப் பட்டது. 'நீ என்ன நினைத்தே பேபி2 என்று கேட்டான் அவன். 'உங்களுக்கு என்மீது பிரியம் இருக்கும். நான் கேட்பதை நீங்கள் மறுக்காமல் செய்வீர்கள் என்று நினைத் தேன். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/114&oldid=923473" இலிருந்து மீள்விக்கப்பட்டது