பக்கம்:துணிந்தவன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34 துணிந்தவன் மாதவன் அவளைக் கூர்ந்து கவனித்தபடி இருந் தாள். அவன் என்ன சொல்லியிருப்பானோ, என்ன செய் திருப்பானோ - அவனுக்கே தெரியாது. திடீரென்று கொடிய புயல் காற்றுபோல் சீறிக்கொண்டு பிரவேசித்தாள், சம்பா. 'ஏய், யார் நீ இங்கே வந்து பெரிய வேலைகள் எல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டியே. போ வெளியே என்று கத்தினாள். பேபி மாதவனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் ஒன்றுமே பேசவில்லை. 'இவ யாரு?’ என்று படபடத்தாள் சம்பா. 'வாரோடே பழைய மாணவி..." 'மாணவியுமாச்சு வெங்காயமுமாச்சு: இங்கே யிருந்து வெளியே போ... ' என்று கூச்சலிட்டாள் சம்பா: "நீ சொன்னதெல்லாம் என் காதிலும் விழுந்தது. நான் பக்கத்து அறையிலேதான் இருந்தேன். அவள் பேபியை அடித்து விடுவாள் போலிருந்தது. பேபி, பொங்கி வந்த கண்ணிரை அடக்கமுடியாத வளாய், விசித்துக் கொண்டே வெளியேறினாள். மாதவன் சிரித்தான். 'நல்லவேளை. நீ வந்து காப்பாற்றினாய்!” என்றான். 'யாரை அவளையா, உங்களையா?" என்று கேட்டுவிட்டு, அர்த்தம் நிறைந்த பார்வையால் அவனைக் குத்தினாள் சம்பா, 'இரண்டு பேரையும் என்றுதான் வைத்துக்கொள் ளேன்!" என்று கூறி நகைத்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/116&oldid=923475" இலிருந்து மீள்விக்கப்பட்டது