பக்கம்:துணிந்தவன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் o Ö 6 நாடே தங்களின் ஏகபோக உரிமை என்பதுபோல் வாழ்ந்து கொழுத்துக் கொண்டிருந்த வெகுஜனக் கட்சி: வரவர மதிப்பிழந்து, மக்களின் நம்பிக்கையையும் இழந்து வந்தது. வரும் தேர்தலில் அந்தக் கட்சிக்கு வெற்றி கிட்டு வது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதன் தலைவர் செல்வரங்கம், இழந்த செல்வாக்கையும் ஆதரவையும் எப்படியும் அடைந்தே தீருவது என்று அரும்பாடு பட்டார். நேர்வழிகளையும், மறைமுக யுத்திகளையும், சாணக்கிய முறைகளையும் தீவிரமாகக் கையாள முன்வந்தார். நாட்டினரிடையே மாதவனுக்கு இருந்த செல்வாக் கைத் தனது கட்சிக்கும் தனக்கும் பயன்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டார் அவர். இதை அறிந்த பரப்பிரம்மம் கலா சாரக் கழகத்தையும் தேர்தலில் குதிக்கச் செய்தார். மாதவனையும் தேர்தலுக்கு நிற்கும்படி தூண்டினார். இதில் குறிப்பிடத்தகுந்த விசேஷம், மாதவன் 'வெகு ஜனக் கட்சித் தலைவர் செல்வரங்கத்தையே எதிர்த்துப் போட்டி யிட முன் வந்ததுதான். செல்வரங்கம் எரிமலையானார். இந்தக் கூத்தாடிப் பயலுக்கு இவ்வளவு திமிர் வந்து விட்டதா? பார்க்கிறேன் இவனை' என உறுமினார், இறுதி முயற்சி ஒன்று செய்ய லாமே என்று அவர் உள்ளம் ஆசை காட்டியது. ஆகவே அவர் மாதவனை சந்தித்துப் பேச வந்தார். மாதவன் அவரை அன்புடன் உபசரித்தான். மதிப் பளித்து கெளரவித்தான். அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு, தேர்தலிலிருந்து அவன் வாபஸ்பெற வேண்டும்; போட்டியிட்டாலும் அவன் வெற்றிபெறப் போவதில்லை என்று செல்வரங்கம் சொன்னார். காரணங்கள் காட்டி விளக்கமாகப் பேசினார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/118&oldid=923477" இலிருந்து மீள்விக்கப்பட்டது