பக்கம்:துணிந்தவன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வல்லிக்கண்ணன் 'திறமை, உழைப்பு, ஊக்கம், உற்சாகம் மட்டும் இருந்தால் போதாது ஒருவன் முன்னேறுவதற்கு. நேர்மை, நியாயம், உண்மை, மனித தர்மம் என்று பேசப்படுபவை எல்லாம் வெறும் பேச்சுக்கும், அலங்கார எழுத்துக்கும் எடுப்பாகத்தான் இருக்கின்றன. ஆயினும் அவை வாழ் விலே எவனையும் உருப்பட வைத்ததில்லை. 'ஆனால், தவறுகள் என்று கருதப்படுவனவற்றை எல்லாம் துணிந்து செய்கிறவர்கள் - பாபங்கள் என்று போதிக்கப்படுபவற்றை விழிப்பு உணர்ச்சியோடு கையாள் கிறவர்கள் சின்னத்தனங்கள் எனக் குறைகூறப்படு கின்றவைகளைக் கூசாது செயல்புரிவோர் பிரமாதமாக வாழமுடிகிறது இன்றைய சமுதாயத்திலே. 'மூப்பு, பிணி, சாக்காடு ஆகியவற்றைக் கண்டு மனம் குமைந்து, வாழ்வில் வெறுப்புற்று, விடுதலைக்கு வழி தேடத்தானே தவித்தது சித்தார்த்த உள்ளம்? அவனும், அவனைப் போன்றவர்களும் என்ன வழிகள் கண்டு பிடித்திருந்தாலும், அவ்வழிகளில் எதுவும் வாழ்க்கை முறையிலே மாற்றம் புகுத்தி விடவில்லை. உலகத்தில் உண்மை ஒளி பரவவில்லை...' மாதவன் இவ்வாறு அடிக்கடி எண்ணினான். அவனிடம் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. அறிவுப் பசி பெற்ற அவன் கண்டதை எல்லாம் படித்துப் பொழுது போக்கிக்கொண்டிருந்தான். இவ்விரண்டு பண்புகளும் எவனையாவது வெற்றிகரமாக வாழ வைத்திருக்கின்றனவா என்ன? ஆனால் மன உளைச்சல் ஏற்படுத்தாமல் விடு வதுமில்லையே!. மாதவனும் இத்தகைய மனோவியாதியினால் பீடிக்கப்பட்டு, அமைதி இழந்து தவித்தான். படிப்படியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/15&oldid=923486" இலிருந்து மீள்விக்கப்பட்டது