பக்கம்:துணிந்தவன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் வெறுப்பு வளர்ந்து வந்தது. வெறுப்பை உருவற்ற சமுதாயத்தின் மீதும், அது போற்றிப் பாதுகாக்கின்ற கண்ணுக்குப் புலனாகாத விலங்குகள் மீதும் தீவிர மாகக் கொட்டினான். அது மட்டும் போதாது; சமூகத்தைத் தண்டிக்க வேண்டும்; அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கக் கூடிய தகுதியும் ஆற்றலும் துணிச்சலும் தனக்கே உண்டு என அவன் நம்பினான். எப்படி எப்படிச் செயல் புரிய வேணும் என்று தீர்மானித்து, திட்டங்களிட்டு, நெஞ்சை உறுதிப்படுத்தி வந்தான் அவன். - - வாழ்க்கை ஒரு போராட்டம் என்று கருதப்படு கிறது. போர் என்றால், அதில் வெற்றி பெறுவதற்கு எவ்வித யுக்திகளையும், தந்திரங்களையும், ஆயுதங் களையும், சூழ்ச்சிகளையும் அனுஷ்டிக்கலாம் அல்லவா? மாதவன் இந்த ரீதியில்தான் சிந்தித்தான். பதி னைந்து வருட காலம் சிந்தித்தான். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், நினைவின் நோக்கைப் பின்னுக்குச் செலுத்தித் தனது வாழ்வுப் பாதையை ஆராய அவன் தவறியதில்லை. அவன் எளிய வாழ்வு வாழ்ந்தான். நேர்மையாளனாய், உண்மை விளம்பியாய், உழைப்பிலே உற்சாகம் உடையவனாய் வாழ்க்கை நடத்தினான், மனிதப் பண்புகள் குன்றாதவனாக விளங்கினான். அவன் எவரையும் ஏமாற்றியதில்லை; ஏமாற்ற ஆசைப்பட்டதுமில்லை. ஆனால் அவனை ஏமாந்தவ னாக்க அநேகர் தயங்கவில்லை. அவன் யாரையும் பழிக்கவோ பரிகசிக்கவோ ஆர்வம் கொண்டதில்லை. எனினும் அவனை 'உருப்படத் தெரியாதவன் 'ஏமாந்த சோனகிரி 'பைத்தியம் என்றெல்லாம் மற்றவர்கள் பரிகசித்தார்கள்....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/16&oldid=923487" இலிருந்து மீள்விக்கப்பட்டது