பக்கம்:துணிந்தவன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 5 இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான் மாதவன், ‘இனி நாம் புதியதோர் வழியில் செல்வோம். கெட்ட போரிடும் உலகத்துக்கு அதன் முறைகள் மூலமே புத்தி கற்பிப் போம் என்று துணிந்தான். அன்று அவனது முப்பத்துமூன்றாவது பிறந்த நாள், இன்று நாம் புதிதாகப் பிறந்தோம். சந்தேகமில்லை; இனி ஒர் புது சக்தி தோன்றும் என்று வாழ்த்துக் கூறியது குளக்கரையில் அமர்ந்திருந்த மாதவன் சரி, வேளை வந்து விட்டது என்று எழுந்தான். ஊருக்குள் நடந்தான். 2 அப்பொழுது இரவு மணி பதினொன்று தானிருக் கும். எனினும். - பட்டிக்காட்டோடும் சேராத பட்டனக் கரையுமில்லாத அந்த இரண்டுங்கெட்டான் ஊர் சவ உறக்கத்தில் அயர்ந்து கிடந்தது. பகல் வேளையில் வேகமும் உயிர்ப்பும் நிறைந்து 'ஜேஜே என்றிருந்த ஊர் சூனியக்காரி எவளுடைய மாயா ஜாலத்துக்கோ உட்பட்டு உணர்வற்று உயிரற்று, இயக்க மற்று மயங்கிக் கிடப்பதுபோல் தோன்றியது. வீடுகளுக்கும் வீதிகளுக்கும் எழில் முலாம் பூசித் திகழ்ந்த பால் நிலவு ஊரின் இயல்புக்கு முரணான சமாதி நிலையையும் பளிச் செனப் புலப்படுத்தியது. - அடைப்பட்டுக் கிடக்கின்ற வீடுகளுக்குள் எல்லாம் உறக்கமும் அமைதியும் கவிந்து கிடக்கவேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/17&oldid=923488" இலிருந்து மீள்விக்கப்பட்டது