பக்கம்:துணிந்தவன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 துணிந்தவன் "இப்படியெல்லாம் சொல்லாதீர்கள், அத்தான். எனக்கு நீங்கள்தான் வாழ்வின் ஒளி என்று நம்பியிருக் கிறேன். என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் ரொம்ப நல்லவர்...' மாதவன் சிரித்தான், கசப்பு நிறைந்த சிரிப்பு. "இப்ப ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று திகைப்புடன் வினவினாள் அவள். 'இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு நீ இப்படிச் செல்வமாட்டாய், காந்தி!' "நான் மாறிவிடுவேன் என்றா நினைக்கிறீர்கள்? 'இல்லை.... நான் முற்றிலும் மாறிவிடுவேன். மாறத் திட்டமிட்டு விட்டேன்..... "அப்படியென்றால்?" 'காலம் கதையை விடுவிக்கும் காந்தி, உன்னிடம் நான் விடைபெற்றுக்கொள்கிறேன். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் - நான் எத்தகைய அயோக்கிய னாக மாறியிருந்தாலும் - காலம் என்னை எவ்விதக் கயவனாகவும் கல்நெஞ்சக் கொடியனாகவும் திருத்தி அமைக்கலாம் என்றாலும், உன் இதயத்தில் எனக்காக நீ தந்துள்ள இடத்தை அழித்து விடாதே. இதுதான் உன் னிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வது...." 'இது என்ன அத்தான் இது? நீங்கள் ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?... அத்தான்....' உணர்ச்சித் துடிப்புடன் கை நீட்டிய காந்திமதியின் பிடிக்குள் சிக்க மறுப்பவன் போல் விலகி நின்றான் மாதவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/22&oldid=923493" இலிருந்து மீள்விக்கப்பட்டது