பக்கம்:துணிந்தவன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 13 அவனுடைய தாத்தா ஒண்டிப்புலியா பிள்ளை ஊரில் நல்ல பெயரோடு வாழ்ந்து, சுயமுயற்சியால் சொத்து சேர்த்து வைத்தார். தனது பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியும் அளிக்க முடிந்தது அவரால், அவருடைய மூத்த புதல்வரும், மாதவனின் தந்தையுமான சிதம்பரம் பிள்ளை பூரண யோக்கியரு மில்லை; முழு அயோக்கியரும் இல்லை. சிதம்பரம் பிள்ளை சர்க்கார் உத்தியோகத்தில், பொறுப்பான ஒரு பதவி வகித்தார். அந்தப் பதவிக்கு உரிய அதிகாரத்தைவிட அதிகமான ஆர்ப்பாட்டங்கள் செய்து அட்டகாசமாக வாழ முடிந்தது அவரால். அவருடைய எடுப்பான தோற்றமும், மிடுக்கான குரலும் யாருக்கும் அஞ்சாத துணிவும் அவருக்குப் பக்க பலங்களாகத் துணை நின்றன. மேலும், கால நிலையும் மக்களின் பண் பாடும் அவரைப் போன்றவர்களின் ஆட்சிக்கு உறுதியான தளம் அமைத்துக் கொடுத்தன. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை, சணப்பன் வீட்டு அம்மியையும் உடைக்கும் என்ற அபத்தமான பழமொழியை வேத வாக்காக நம்பி, அடங்கி ஒடுங்கி அஞ்சிக்கிடந்தவர்கள் வாழ்ந்த காலம் அது. சிதம்பரம் பிள்ளையைப் போன்ற துணிந்த கட்டைகள் தங்கள் இஷ்டம்போல் ஆட்சி புரிய முடிந்தது. தங்கள் அதிகார எல்லைக்குள் தாங்களே ராஜாக்கள் என்ற நம்பிக்கை யோடு அவர்கள் தடியடி தர்ப்ார் நடத்த முடிந்தது அந்தக் காலத்திலே, அவர்களைத் தணிக்கை செய்வதாகப் பெயர் பண்ணி 'அரித்துப் பொறுக்குவதற்காக மேலதிகாரிகள் விஜயம் செய்தால், சில்லறை தேவதைகள் ஜனங்களிட மிருந்து பிய்த்துப்பிடுங்கி துரை’க்குத் திருப்தியாக வாய்க் கரிசி போடுவது ம் அனுபவ சாத்தியமாக இருந்தது அப்போது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/25&oldid=923496" இலிருந்து மீள்விக்கப்பட்டது