பக்கம்:துணிந்தவன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் மாதவனுக்குச் சிறிதாவது இனிய உணர்வுகளும் நினைவுகளும் எழவசதி அளித்த பூஞ்சோலையாக விள்ங் கியவள் அவனுடைய மாமா மகள் காந்திமதி தான். அவள் அவனையே மணம் புரிந்து கொள்ள வேண்டும் . கொள்ள முடியும் என்று நம்பியிருந்தாள். அவன் திருமணத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தது கிடையாது. பெரியோர்களாகப் பார்த்து, நிச்சயித்த சுப தினத்தில் காந்திமதியை அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி யிருந்தால் அவன் மிக்க மகிழ்ச்சியே அடைந்திருப்பான். ஆனால், காந்திமதியின் தந்தை சங்கரலிங்கம் பிள்ளை சமூகத்தின் சரியான பிரதிநிதி. சொத்தோடு சொத்து சேரவேண்டும் என்று திட்டமிட்டு வேலைசெய்வது தான் அவர் பண்பே தவிர, சொத்து மிகுந்தவர் ஏழையொருவனை வாழவைக்கலாமே என்ற நல்லெண்ணத்துக்கும் அவ ருக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை! ஆகையினால் அவர் உறவு முறையைப் பார்க்கவில்லை பெரிய இடத்துப் பிள்ளையாண்டான்களின் ஜாதகங்களை ஆராய்வதில் தான் அக்கறை காட்டினார். அவர் ஆராய்ச்சி நல்ல பலன் அளித்தது. இருபோகம் வயல், தோட்டம் துரவு, வீடு, மாடுகள், ஏகபட்ட பணம் முதலியவைகளுக்கு அதிபதி யான திருமலையப்ப பிள்ளை என்பவரின் தன்னந் தனிப் புத்திரபாக்கியமான அம்பலவாணன் அகப்பட்டான். அவன் படித்துப் பட்டம் பெற்றவன் என்றும் பேச்சு அடிபட்டது. மாதவன் 'சும்மா பத்தாவது முடியப் படிச்சவன் தானே! அவன் பட்டம் பெற்றானா; பாட்டைத் தொலைச்சானா? ஒரு எழவுமில்லையே. பின்னே?... இதனாலும் மாதவனின் வாழ்க்கையில் வறட்சி அதிகமாயிற்று; வெறுப்பு மிகுந்தது. பாலைப் பெரு வெளியிலே தனது வாழ்க்கை வறண்ட தடமாகச் சார மற்று நீண்டு போகிறது என்று குமைந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/28&oldid=923499" இலிருந்து மீள்விக்கப்பட்டது