பக்கம்:துணிந்தவன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 47 தீவிரமாகச் சிந்தித்து, அதன் திசையைத் திருப்பி விடுவது என்று துணிந்தும் விட்டான். 4 - கனவில் கண்ட காட்சியாக இருக்கலாம் அது. அல்லது, என்றோ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்து நினைவிலே நீங்காத இடம் பெற்றுவிட்ட சித்திரமாக இருக்குமோ? அது எவ்வாறு இருப்பினும் மாதவன் உள்ளத் திலே அடிக்கடி நிழலாடும் சிறப்பு பெற்று விளங்கியது. - கடல், கருமையாய், பயங்கரமாய், சீறிப் புரளும் அலைகளோடு காணப்படுகிறது. கண் பாய்கிற திக்கெல் லாம் தண்ணிர், பார்வை எட்டுகிற துரமெங்கும் அதே பயனற்ற உப்பு நீரின் உக்கிரத் தோற்றம். மேலே, நம்பிக்கை அளிக்க இயலாத வானம். ஒரு கப்பல் போய்கொண்டிருக் கிறது. மேல் தளத்தில், கைப்பிடிக் கம்பி ஒரத்தில் நின்று வேடிக்கை பார்கிறான் ஒருவன். காற்று கொஞ்சம் கடுமை யாகத்தான் வீசுகிறது. ஆகவே கப்பலின் அசைவு பயங் கரமாக இருக்கிறது. மனிதர்கள் ஊஞ்சலில் வைத்து ஆவேச மாக ஆட்டப் படுகிறவர்கள்போல் திணறுகிறார்கள்; திகைக்கிறார்கள்: தள்ளாடித் தடுமாறுகிறார்கள். ஒரத்தில் நின்றவன் எப்படியோ வழுக்கிக் கடலுக்குள் விழுந்து விடுகிறான். அதிர்ச்சியால் மூழ்கி எழுந்து, அலைகளால் ஏற்றுண்டு பின் ஒருவாறு சமாளித்து அவன் தலைதூக்கிப் பார்க்கிறபோது, கப்பல் தனக்காக நிறுத்தப்படவில்லை - மற்றவர்கள் தன்னைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை தன்னிடம் கொஞ்சம்கூட இரக்கம் காட்டவில்லை; இருக் கிறானா, செத்தானா என்று அக்கறை காட்டவுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/29&oldid=923500" இலிருந்து மீள்விக்கப்பட்டது