பக்கம்:துணிந்தவன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23 சிபாரிசு செய்யாவிட்டாலும்கூட, நான் உன்னை இந்த வேல்ைக்கு ஏற்றுக் கொள்கிறேன். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். உனக்கு, உரிய அறையை வேலைக்காரன் காட்டுவான்' என்று அறிவித்தார். அந்தச் சமயத்தில் சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். பையன் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தான். அவ னுக்குப் பன்னிரெண்டு வயது இருக்கும். எனினும், அவ் வயதுக்குரிய வளர்ச்சிப் பெறவில்லை அவன் உடல். ஒட்டக் கத்திரித்து விடப்பட்டிருந்த தலைமயிர், பருமனான தேங்காய் போன்ற மண்டையையும், பெரி தாகப் புரண்டுகொண்டிருந்த முண்டக் கண்களையும் பளிச்செனக் காட்டும் பகைப்புலனாக அமைந்திருந்தது. அவன் பற்கள் மஞ்சள் நிறம்படிந்து காணப்பட்டன. அவ்வேளையில் கூட அவன் வாயில் எதையோ ஒதுக்கி வைத்திருந்தான் என்பதைத் துருத்தி நின்ற ஒரு பக்கத்துக் கன்னம் கூறியது. வெள்ளைச் சட்டையும், காக்கிக் கால் சட்டையும் அணிந்திருந்தான் அவன். 'பால்சந்தர், இதோ இவர்தான் இனி உனக்கு உபாத்தியாயர் - மிஸ்டர் மாதவன். இவர் சொல்படி நடக்க வேண்டும்" என்று பெரியவர் அறிமுகம் செய்துவைத்தார். மாதவனிடம் அவர் தெரிவித்தார்: நாங்கள் வெளியூர்களிலேயே அதிகம் சுற்றிக் கொண்டிருந்தோம். அதனால் பையனுக்குத் தமிழ் நன்றாக எழுதப்படிக்கத் தெரியாது. அதைத்தான் நீர் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பொது விஷயங்களில் அறிவுபெறச் செய் வதும் முக்கியம்தான்.” தனிமையில் 'நீ போட்டுப் பேசிய பெரிய மனிதர் பையன் முன்னே, அவனது வாத்தியார் என்று மதிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/35&oldid=923507" இலிருந்து மீள்விக்கப்பட்டது