பக்கம்:துணிந்தவன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 துணிந்தவன் கொடுத்து நீர் என்று குறிப்பிட்டதை மாதவன் கவனிக்கத் வறில்லை. அவன் மனம் சிரித்தது.

お°

த "மாணிக்கம்!' என்று கூப்பிட்டார் பவானந்தம். வேலைக்காரன் வந்ததும், தோட்டத்து ரூமை இவருக்குக் காட்டு. சாவியையும் இவரிடமே கொடுத்துவிடு. இவ ருக்குத் தேவையானதை எல்லாம் அவ்வப்போது கவனித்துச் செய் என்றார். 'பால்சந்தர், நீ சாப்பிடப் போகும்போது, உன் ஸாரையும் கூட்டிக்கொண்டுபோ. தினம் அப்படியே செய்யலாம் என்று மகனிடம் சொன்னார். 'ஒ' என்று கூவியவாறே ஒடிப்போனான் அவன். "பாலசந்திரன் கெட்டபையன் என்று சொல்ல முடியாது. அடம் கொஞ்சம் ஜாஸ்தி, எதுக்கெடுத்தாலும் அழுவான். அது பலவீனத்தாலும், பிறர் தன்னைப் புறக் கணிக்கிறார்கள் என்ற நினைப்பாலும் வந்த சுபாவமாக இருக்கலாம். நீர் கவனித்து அட்ஜஸ்ட் செய்துகொள்ளும்' என்று கூறி பெரியவர் மாதவனை மாணிக்கத்தோடு அனுப்பிவைத்தார். தோட்டத்தின் ஒரு மூலையில், கார் நிறுத்து மிடத்தருகே ஷெட் போன்ற ஒரு அறை இருந்தது. அதுவும் முன்பு கார் நிற்குமிடமாகவோ, வண்டி நின்ற இடமாகவோ இருந்திருக்கலாம். விசாலமாகத்தர்ன் இருந்தது. சுவர்களில் இரண்டு அலமாரிகள் கதவுகள் இல்லாமல் காட்சி தந்தன. ஒரு பக்கம் ஒரே ஒரு ஜன்னல் காணப்பட்டது. இது போதும். ரயிலடியிலும், பார்க் பெஞ்சிலும் படுத்துத் தூங்கி அனுபவம் பெற்றுள்ளவ னுக்கு இது பிரமாதம் என்றே சொல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/36&oldid=923508" இலிருந்து மீள்விக்கப்பட்டது