பக்கம்:துணிந்தவன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 25 மாதவனுக்காக ஒரு நாற்காலி, ஒரு மேஜை, நீள மான பெஞ்சு ஒன்று, சாதாரண ஜமுக்காளம், தலையணை, தண்ணீர் வைக்க மண் கூஜா, கண்ணாடித் தம்ளர், அரிக்கன் லாந்தர், மண்ணெண்ணெய்ப் புட்டி எல்லாம் ஒழுங்காக வந்து சேர்ந்தன. பரவால்லியே! வசதியான ஏற்பாடுதான் என்று மகிழ்ந்தது அவன் உள்ளம். வேறு ஏதாவது வேண்டுமா ஸார்?' என்று கேட்ட படி வந்து சேர்ந்தான் பாலச்சந்திரன். "எழுதுவதற்குத் தாள், பேனா, மைக்கூடு, பென்சில், புத்தகங்கள் ஏதாவது இருந்தால்..... என்று இழுத்தான் மாதவன். - 'இந்தாங்க. உங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். அப்பா உங்களிடம் கொடுக்கச் சொன் னாங்க என்று கூறி சந்திரன் அவனிடம் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தான். * 'அடடே! என்று குதித்தது மாதவ மனக்குறளி. 'நான் வாய் திறந்து கேளாதபோதே அவர் இதெல்லாம் ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லையே என்ற எண்ணமும் மகிழ்ச்சியும் பிறந்தன அவனுக்கு. இதைப் போலவே சாப்பாட்டு வசதியும் பிறவும் அவனுக்கு மிகுந்த திருப்தி தந்தன. ஆகவே, அடிப் படைப் பிரச்னைகளைப் பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை. முதல் முகாம் அமைத்தாயிற்று. இனி முன்னேறு வதற்கு வேண்டிய வழிவகைகளைப் பற்றி யோசிக்க லாம்' என்று முடிவு செய்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/37&oldid=923509" இலிருந்து மீள்விக்கப்பட்டது