பக்கம்:துணிந்தவன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மேஜை மு ன் அமர்ந்து மாதவன் என்னவோ எழுதிக் கொண்டிருந்தான். அந்த இடத்துக்கு அவன் சேர்ந்த மறுநாள். பிற்பகல் நேரம். பெரிய வீட்டார் அனைவரும் உண்ட கிறக்கத்தில் சொக்கிக் கிடக்கும் வேளை. வாசலுக்கு வெளியே 'ஸார் மோர் இங்கிறதெல் லாம் இவர்தானாக்கும்?' என்ற இளம் குரல் எழுந்தது. மாதவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். யாரும் தென் படவில்லை. எனினும் அவன் அந்தப் பக்கமே பார்த்த டி இருந்தான். சிறு நெற்றியும், அதன்மீது வந்து விழும் கிராப்புத் தலைமுடியும், குறு குறுக்கும் கண் ஒன்றும் - முகத்தின் ஒரு பகுதி மட்டும் எட்டிப்பார்க்கவே, மாதவன் புன்னகை புரிந்தான். படக் கென்று பின்வாங்கிக் கொண்டது அந்த முகம். அவன் விளையாட்டுக் குரலில் உரக்கவே பேசினான்: 'பார் பார் மந்திரமில் லே; மாயமில்லே அருமையான வேலை. ஜோரான காட்சி. ஒரு பையன் வரப் போறான் பார். உள்ளே வந்து குதிக்கப் போறான் լյրiյ அடக்க முடியாத சிரிப்பு பொங்கி வழிந்தது வெளியே. 'ஏஹே, பையனாம்! பெண்ணைப் போயி ைப யன்னு சொல்றார்டோய் இந்த ஸார் என்று கூவிக்கொண்டு வாசலில் வந்து கோலம் முழுதும் காட்டி நின்றாள் ஒரு சிறுமி. அவள் சிரிப்பு இன்னும் குறைய வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/38&oldid=923510" இலிருந்து மீள்விக்கப்பட்டது