பக்கம்:துணிந்தவன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 27 'இந்தப் பெண்ணின் தலைமுடியை வெட்டி விடாமல் நீளமாக வளர விட்டிருந்தால் அழகாக இருக்கும் என்ற நினைப்பே மாதவனுக்கு முதலில் எழுந்தது அந்த அழகு முகத்தைப் பார்த்ததும். கவுன் அணிந்து, முற்றிய நாகரிகத்தின் சிற் றுருவப் பதிப்பாக நின்ற அப்பெண் பல்லைக் காட்டினாள். "சரியான அரிசிப் பல், பச்சரிசி மாதிரி என்று பேசியது அவன மனம். 'நீ பாலசந்திரனின் தங்கச்சிதானே? என்று அவன் கேட்டான். 'ஏஹே, தங்கச்சியாம்! எனக்கு வயசு பதிமூணு ஆகுது. பாலு வுக்குப் பதினொண்ணே முக்கால்தானே ஆகுது. நான் எப்படி அவன் தங்கச்சி ஆவேன்?' என்று கைகொட்டிச் சிரித்த அச்சிறுமி அறைக்குள் வந்து ஒரு சுற்றுச் சுற்றி நின்றாள். 'நீங்கதானே புது ஸார்? எனக்குத் தெரியுமே!' என்று நீட்டினாள் அவள். "எப்படித் தெரியும்?" 'தெர்ரியும்' என்று அழுத்தமாகக் கூறினாள் அவள்: 'உங்க பேருகூட எனக்குத் தெரியுமே!" "என்னவாம்?" 'ஊகுங், சொல்லமாட்டேன்' என்று உதடுகளை மூடிக்கொண்டு, குட்டையான மயிர் வீசி ஆடப் பல மாகத் தலையசைத்தாள் சிறுமி. 'உன் பேரும் எனக்குத் தெரியும் என்றான் மாதவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/39&oldid=923511" இலிருந்து மீள்விக்கப்பட்டது