பக்கம்:துணிந்தவன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கன்னன் 34 அவன் நாற்காலியில் அமர்ந்தான். அவள் எழுந்து 'அப்பா: என்று ஆசுவாசப் பெரு மூச்செறிந்தாள். அவளது சின்னஞ்சிறு உதடுகள் துடித்தன. இன்னும் சிரிப்பை அள்ளி அள்ளிக் கொட்டத் தயாராகும் அழகிய ஊற்று மாதிரித் தோன்றியது அவள் வாய். 'நீங்க ரொம்ப நல்ல ஸார்!’ என்று சொல்லிக் கொண்டு அவன்மீது சாய்ந்தாள் பேபி. மாதவனின் மனம் குறுகுறுத்தது. காந்திமதிக்குச் சொன்ன பதிலை - இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு நீ இப்படிச் சொல்ல மாட்டாய் பெண்ணே! என்று இவளிடமும் கூறலாம் போலிருந்தது. ஆயினும் அவன் ஒன்றும் சொல்லாமல் சிரித்து வைத்தான். 'நீங்க எனக்கும் லாராக வரலீயேன்னுதான் வருத்தமா இருக்கு!’ என்று முனங்கினாள் அவள். உட னேயே குதித்து எழுந்து, வெளியே துள்ளி ஓடினாள். 'சந்தோஷம் மிகுந்த குழந்தை' என்று நினைத் தான் மாதவன். - x 7 'எனக்கு உங்களை: ரொம்பவும் பிடித்திருக்கு ஸார் என்று பாலசந்திரன் மாதவனிடம் சொன்னான். அவர்கள் இருவரும் பழக ஆரம்பித்துச் சில தினங்கள் சென்ற பிறகுதான் சொன்னான். 'அப்படியா ரொம்ப சந்தோஷம் என்றான் மாதவன். பிடிக்காதா பின்னே, உன் இஷ்டம் போலவே எல்லாக் காரியங்களையும் செய்யலாம் என்று ஆதரிக் கிறபோது!’ என அவன் மனக்குறளி கனைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/43&oldid=923516" இலிருந்து மீள்விக்கப்பட்டது