பக்கம்:துணிந்தவன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 துணிந்தவன் 3 'அதனாலே இப்ப உங்களுக்கு இதோ ஒரு அன் பளிப்பு” என்று கையை நீட்டினான் சந்திரன். அதில் இனிய சாக்லெட் துண்டுகள் மூன்று பளிச்சிட்டன. மாதவன் அவற்றை எடுத்துக்கொண்டான். 'எனக்கு சாக்லட்டு என்றால் உயிர்' என்றான் பையன். சாக்லட்டுகளை மட்டுமே தின்று ஒருவன் உயிர் வாழ முடியுமா என ஆராய்வது அருமையான விஷய மாகத்தானிருக்கும். பயனுள்ள, சுவை மிகுந்த காரிய மாகவும் அமையும்." "ஆனால் பெரியவங்க அடிக்கடி கண்டிக்கிறாங்க, லார். ஏய் சாக்லட்டு நிறையத் தின்னாதே; பல்லு கெட்டு விடும்; வயிறு கெட்டுப்போகும் என்றெல்லாம் மிரட்டு கிறாங்களே?” - - 'சின்னவர்களைக் கண்டிக்காமலும், அடிக்கடி அதட்டியும் அடித்தும் மிரட்டாமலும் இருந்துவிட்டால் அவர்கள் பெரியவர்கள் என்பது எப்படித் தெரியும்? தங்கள் சூரத்தனங்களை எல்லாம் அவர்கள் பையன்களிடமும் சிறுமிகளிடமும் தானே காட்ட முடியும்' மாதவனின் பேச்சு மாணவனுக்குப் பிடித்திருந்த தில் வியப்பெதுவும் இல்லையே! 'பசித்தால் தான் புசிக்க வேண்டும் என்பது சரியா?” என்று கேட்டான் சந்திரன் ஒரு சமயம். 'சரி என்று எப்படிச் சொல்வது? பசிக்கிறபோது சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படு கிறார்கள் ரொம்பப்பேர். ஆகவே அகப்படுவதை எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/44&oldid=923517" இலிருந்து மீள்விக்கப்பட்டது