பக்கம்:துணிந்தவன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 துணிந்தவன் முயற்சிக்காமல், ஒங்கி வளருவதற்குத் தேவையான துண்டுதல்கள் அளித்து வந்தான். ‘வாழ்க்கை நல்லவர்களை ஆதரிப்பதில்லை. ஆகவே நல்லவனாகக் காலம் கழிப்பதற்கோ, நல்லவர் களைத் தயாரித்து விடுவதற்கோ, அருகதையற்றது. இந்த வாழ்க்கை என்று அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான். மாதவன் பேபிக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை. ஆயினும் அவன் நேரடியாக அந்தச் சிறுமிக்குப் போதனைகளோ, தனது புது முறைப் பயிற்சியோ அளிக்க முன்வராமல் கதைகள் மூலமும் ரசமான சம்பாஷணை மூலமும் கோளாறான் எண்ணங்களைக் கற்பித்தான். மேல் நோக்கில் அவை கோளாறான கருத்துக்கள்' என்று தோன்றா. ஆனால் நடைமுறையில் அவை விபரீத பலன்களையே தரும். இத்ை அவன் நன்கு அறிந்திருந் தான். 'உண்மை சொல்வது நல்லது, பேபி. மனசில் பட்டதை அப்படியே சொல்லிவிட வேண்டியது தான்' என்று அவன் அச்சிறுமியிடம் கூறினான்." 'உள்ளதைச் சொல்வதுதான் எனக்குப் பிடிக்கும். சரி என்று பட்டால், நான் கண்டிப்பாய்ச் சத்தம் போட்டுச் சொல்லி விடுவேன்' என்று பேபி பெருமையாகச் சொன் னாள். 'அதுதான் சரி, உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்படனும்? என் மூஞ்சி நல்லாயில்லை என்றால், மூஞ்சியைப் பாரு கொழுக்கட்டை மூக்கும், கோலிக்காய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/46&oldid=923519" இலிருந்து மீள்விக்கப்பட்டது