பக்கம்:துணிந்தவன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாலசந்திரனுக்குப் பல இடங்களையும் காட்டுவ தாகப் பெயர் பண்ணிக் கொண்டு மாதவன் நகர் நெடு கிலும் சுற்றினான். தான் மட்டும் தனியாகவும் திரிந்தான். நகரத்தையும், நகர மக்களின் வாழ்க்கை முறைகளை யும், நாகரிகத்தின் போலித்தன்மைகளையும், சமூகத்தின் கோளாறுகளையும், மனிதரின் சிறுமை பெருமைகளை யும் ஆராய்வது அவனுக்குப் பொழுதுபோக்கு ஆயிற்று. நாகரிகப் பெருநகரம் - முரண்பாடுகளின் கொலு மண்டபம், உயர்வு தாழ்வுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியும் காட்டாமலும் பாதுகாக்கின்ற களஞ்சியம். கலவிதமான பண்புகளும் பல்கிப் பெருக இடமளிக்கும் வளமான பண்ணை.... அதில் காலூன்றி விட்ட மாதவன் தனது எண்ணங் களையும் ஆசைகளையும் பயிரிட்டு வெற்றிகரமான விளைவு காணத் தவித்தான். எதிரியின் கோட்டைக்குள் புகுந்து, அவனுடைய பலத்தையும் பலவீனத்தையும் விழிப்புடன் கவனித்து உரிய முறையில் படையெடுத்துத் தாக்குவதற்கு வேளையும் வழியும் தேடுகிற உளவாளி போல் அவனும் கணித்து வந்தான்; காத்திருந்தான். அதே சமயத்தில் அவன் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த வெறுப்புத் தீ அணைந்து போகாமலும் கவனித்து வந்தான். உல்லாச வாழ்வு வாழ்கிற சீமான்களை யும் ஒய்யாரிகளையும் காணும் போதெல்லாம், இப்படி வாழ்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று சீறியது அவன் மனம். - இப்போது சுக செளகரியங்களோடு வாழ்கிற வர்கள், செல்வமும் சிறப்பும் பெறறுள்ளவர்கள் போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/48&oldid=923521" இலிருந்து மீள்விக்கப்பட்டது