பக்கம்:துணிந்தவன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 37 ஜன்மத்தில் புண்ணியம் செய்தவர்களாம்! இதுபோன்ற அபத்தமான கருத்து வேறு ஏதாவது இருக்க முடியுமா? இன்று அவர்கள் நடத்துகிற வாழ்வு முறைகளைக் கவனித் தால், அவர்கள் முன்பு புனிதராய் - புண்ணியராய் - நல்லவ ராய்க் காலம் கழித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. புண்ணியம் செய்து, 'மறுபிறப்பில் சீரும் சிறப்புமாக வாழும் பாக்கியம் பெற்றவர்கள் இந்த வாழ்வில் பன்றித் தன வாழ்வு வாழ்வதேன்? இப்படி வாழ்வதற்காக, ஒரு ஜன்மம் பூராவும் நல்லவனாக கஷ்டப்படவேண்டுமா? இப்பொழுது மோசமாக வாழ்வதற்காக அடுத்த ஜன்மம்' தொல்லைகள் நிறைந்ததாக அமையும் என்று சொல் வார்கள். உத்தம வாழ்வு வாழ்ந்ததற்குப் பரிசாக சீர் கெட்ட வாழ்வு வாழ வசதிகளும் பக்குவநிலையும் அளித்து விட்டு, அப்புறம் இப்படி வாழ்ந்தாயே!” என்று தண்டனை கொடுக்க முனைவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இவ்வாறு வாழ்க்கை நியதிகளை வகுக்கும் சக்தி அது எது வாக இருந்தாலும், அதன் பெயர் என்னவாயிருப்பி னும் - கொடியது; நேரிய பண்புகளற்றது: அறிவற்றதும் கூட. மாதவனின் சிந்தனை தடம் புரண்டு ஒடுகிற போது, அவன் கால்களும் எங்கெங்கோ நடக்கும். அத் தகைய சந்தர்ப்பம் ஒன்றிலே விசித்திரமான சம்பவம் எதிர்ப்பட்டது. அந்தி வேளை. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெரு ஒன்றின் நடுவில் அவன் மெதுவாக நடந்து சென்றான் அழகும் அமைதியும் நிறைந்த குறுகலான விதி அது. திடீ ரென்று அவனுக்குப் பின்னால் சிரிப்பொலி வெடிக்க வும், அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/49&oldid=923522" இலிருந்து மீள்விக்கப்பட்டது