பக்கம்:துணிந்தவன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 43 'பத்தாசி, சுசியன், முந்திரிக் கொத்து இதெல்லாம் அசல் தமிழ் நாட்டுச் சரக்குகள் ஸார்!" ‘'என்னது என்னது என்னது?’ என்று பரபரப்பு அடைந்தார் அவர். மாதவன் நிறுத்தி நிதானமாகச் சொன்னான். அவர் பையிலிருந்த காகிதத்தை எடுத்து, பென்சிலால் குறித்துக் கொண்டார். . . 'அவற்றை நான் தின்று பார்த்ததில்லை. கேள்விப் பட்டதுகூட இல்லையே... சரி, பார்க்கலாம்.... அப் புறம், வடை என்பது தமிழ்நாட்டு விஷயமல்ல. சாம்பார் கூட இங்கே உற்பத்தியானது அல்ல...." 'எனக்கு அப்படித் தோணலே லார்' 'அதுக்கு நான் என்னப்பா செய்வேன்? ஆராய்ச்சி பேசுது அப்பனே, ஆராய்ச்சி பேசுது!’ என அழுத்தமாகக் கூறினார் பவானந்தம். - - உம்ம ஆராய்ச்சியைக் கொண்டு உடைப்பிலே போடும் ' என்று உறுமியது அவன் மனக்குறளி. ஆயினும் அவன் அறிவு தடை விதித்தது. 'ஒரே உலகம் கட்சித் தலைவர் ஞானப் பிரகாசம் கூட இதை ஆட்சேபிக்கவில்லை என்றால், இது எப்படித் தவறாக முடியும்? அவர் மிகவும் பாராட்டினார். இந்தப் புத்தகம் தனது ஒரே உலகம் கொள்கைக்கு வலுவான ஆதரவாக அமையும் என்று அவர் சொன்னாரே' என்றார் பவானந்தம். . . 'நீர் அவருக்கு அவ்வப்போது நூறும் இருநூறும் செலவுக்குக் கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள். பின்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/55&oldid=923529" இலிருந்து மீள்விக்கப்பட்டது