பக்கம்:துணிந்தவன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 துணிந்தவன் "ஆமாம், பேபி உங்களைப் பற்றி என்னிடம் சொல் லாத நாளே கிடையாது. அந்த ஸார் இன்னிக்கு இப்படி ஒரு கதை சொன்னார், அப்படிச் செய்தார் - இதுபோல் ஏதாவது விஷயம் இருக்கும் அவள் உற்சாகமாகச் சொல் வதற்கு.” - - அவள் குரல் சன்னமாய், காதில் இனிமை சேர்ப்ப தாய், இழைந்தது. மாதவனுக்கு அவனைப் பிடித்து விட்டது. அவள் மனசுக்கும் அவனைப் பிடித்திருக்கத் தான் வேண்டும். இல்லையேல் அவள் ஏன் அவன் முகத் தையே பார்த்துக்கொண்டு நிற்க வேண்டும்? ஏன் காரணம் இல்லாமலே சிரிக்க வேண்டும்? ஏன் கண்ணிலே கண் னிட்டு மீட்டுக்கொண்டு, பின்னரும் கண்ணோடு கண் சேர்ப்பதில் ஆர்வம் உடையளாதல் வேண்டும்? பொரு வில்லாப் பேச்சு பல பேசிப் பொழுது போக்குவதில்ே ஏன் அவள் மகிழ்வு காட்ட வேண்டும்? தன் பெயர் வசந்தா என்று அறிவித்தாள் அவள். கலை வளர்ச்சி, சமூக சேவை, குழந்தைப் பயிற்சி முதலிய விஷயங்களில் தனக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டு என்று அவளாகவே சொன்னாள். ஒருவாறு அங்கிருந்து நகர்ந்தாள், போகும்போதே திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்த படி சென்றாள். 'உலகம் பல விதம் என்று மு னங்கி னான் மாதவன். 'இவள் நமக்குப் பயன்படக்கூடும் என்று தோன்றுகிறது. இவள் உறவை வளர்க்க முயற்சிப்பது நன்று என்று அவன் மனம் கணக்குப் பண்ணியது. வசந்தாவின் உள்ளமும் அவ்விதமே எண்ணியிருக்க வேண்டும், ஏனெனில் அவள் அந்த வீட்டுக்கு வர நேர்ந்தபோதெல்லாம் தோட்டத்துப் பக்கம் வந்தாள். மாதவன் வெளியே காணப்படாவிட்டால், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/60&oldid=923535" இலிருந்து மீள்விக்கப்பட்டது