பக்கம்:துணிந்தவன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 57 'இந்த மேதாவி வார் யாரோ என்று கேலியாக விசாரித்தார் தந்தை. ‘மாதவன் ஸ்ார்தான்' என்ற பதிலைக் கேட்டு அவர் திடுக்கிட்டார். 'இந்தமாதிரி எல்லாம் உனக்குப் பாடம் சொல்லித் தருவதற்காகவா அவனை இந்த வீட்டிலே வைத்திருக்கு? ... ஏய், போய் மாதவனைக் கூட்டி வா!' என்று உத்தரவிட்ட படி திண்ணைக்கு வந்தார் பவானந்தம். அங்கே நின்ற தோட்டக்காரன் காதுகளிலும் அந்த உத்தரவு விழுந்தது. ஒரு முக்கிய விஷயம் எசமான். இதையும் கேட்டுவிட்டு அவருக்கு ஆள் அனுப்புங்க. ' என்றான். . . - ‘என்ன?’ என்று உறுமிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார் பெரியவர். தோட்டக்காரன் நடந்த விஷயத்தைச் சொல்லச் சொல்ல, அவர் ஆத்திரமும் கோபமும் அதிகரித் தன. மேலும் தாமதம் செய்யாமல் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தார். மாதவன் வந்ததும் அவனை மேலும் கீழுமாக வெறித்துப் பார்த்தார் அவர். பாலச்சந்திரனின் அலங் கோல நிலையையும் கவனித்தார். இதெல்லாம் என்ன? ' என்ற கர்ஜனை வெடித்தது அவரிடமிருந்து. 'பால்சந்தர், இதென்ன அலங்கோலம்?' என்று கத்தினார்.தந்தை. 'ஒண்ணுமில்லை அப்பா!' என்று தீனக்குரலில் தெரிவித்தான் பாலு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/69&oldid=923544" இலிருந்து மீள்விக்கப்பட்டது