பக்கம்:துணிந்தவன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இயற்கையில் மனிதன் நல்லவன். நடைமுறை வாழ்க்கையின்மீது வெறுப்புற்ற மனிதர்கள் அடியோடு அதைமாற்றி ஒர் புது உலகம் சிருஷ்டிக்கத் துடிக்கிறார்கள்; போர்ாடுகிறார்கள்; அந்தப் போராட்டத்தின்மீது நம்பிக்கை யில்லாத தனி மனிதன் அதைத் தனது ஞானோபதேசத்தி னால் திருத்திவிட முடியும் என்று எண்ணுகிறான்; இல்லா விட்டால் சமூகத்தின் கொடுமைகளைத் தானும் புரிந்து அதைப் பழிவாங்க, வஞ்சம் தீர்க்க முயல்கிறான்! - இரண்டின் மூலமும் தனிமனித வீம்பு தோல்வியுற வேண்டியதுதான் விதி - நியதி: - சமூகத்தின் பலஹlனங்களை, கண்மூடித் தனத்தை, மூடத்தனத்தை, சின்னத்தனத்தை வெறுப்பவன், அவற் றையே பயன்படுத்தித் தனது தனி வாழ்க்கையை ஆடம்பர மாய் உயர்த்திக் கொள்வானேயாகில், அவன் சமூகத்தை எதிர்க்கும் உரிமையை இழந்துவிடுகிறான் அல்லவா? நல்லதோர் லட்சியச் சமூகத்தின் விரோதியாகி விடுகிறான் அல்லவா? அப்பொழுது நல்ல சமூகத்தை உருவாக்கு கிறவர்களின் எதிர்ப்பில், அல்லது தனது இற்றுப்போன சமூகக் கிருமிகளின் உறவில் அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறவன் ஆகிறான்; அழிந்தும் போகிறான். இந்த அரிய உண்மையை அடிப்படையாகக் கொண்டு இந்த நல்ல நாவலை சிருஷ்டித்திருக்கிறார் திரு. வல்லிக்கண்ணன். ஆசிரியர், தமது வாழ்நாளில் பெரும் நாவலாகச் சிருஷ்டிக்க வைத்திருந்த மூலக்கருவின் முதல் ஜனனம் இந்தத் துணிந்தவன் - வ. விஜயபாஸ்கரன் ஆசிரியர் சரஸ்வதி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/7&oldid=923545" இலிருந்து மீள்விக்கப்பட்டது