பக்கம்:துணிந்தவன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 64 'அப்புறம்!” 'நானறியேன் பராபரமே!’ என்று கூறிச் சிரித்தான் அவன். அவளும் நகைத்தாள். 'சரி, காரில் ஏறுங்கள். பெட்டியை பின்னால் வையுங்கள். முதலில் ஒரு ரெஸ்டா ரெண்டுக்குப் போவோம்' என்று வசந்தா சொன்னாள். 'அருமையான யோசனை' என்று ஆமோதித்தான் மாதவன். காரில் போகிற போதே, நடந்த விஷயங்களை ஒருவாறு கேட்டறிந்துகொண்டாள் அவள். உங்கள் போக்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதே மாதிரிப் போனால் வாழ்க்கை என்ன ஆகிறது?’ என்று கேட்டாள். 'அதைப்பற்றி வாழ்க்கை கவலைப்படட்டுமே: நான் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்றான் அவன். அவன் பேச்சு புரியாததனாலோ, அல்லது என்ன பதில் சொல்வது என்று தெரியதாதனாலோ, அவள் சும்மா சிரித்து வைத்தாள். எனினும் அவள் மனம் வேலை செய்து கொண்டிருந்தது. அது ஒட்டலில் டிபன் சாப்பிடுகையில் விளங்கிற்று. 'நீங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருக்க முடியாது. ' என்று ஆரம்பித்தாள் வசந்தா. 'தெரியும். அந்த எண்ணம் எனக்கு இல்லவு மில்லை. அப்படி நினைந்திருந்தால் நான் முச்சந்திப் பிள்ளையாராக நின்று பொழுதுபோக்கியிருப்பேனா என்ன?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/73&oldid=923549" இலிருந்து மீள்விக்கப்பட்டது