பக்கம்:துணிந்தவன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 65 'இவ்வளவு ரூபாயை நான் எப்படிச் செலவு செய்யப்போகிறேன்!” என்று மலைத்தான் மாதவன். சாப் பாடு இலவசம், தங்குமிடம் சும்மா. எங்காவது போக வேண்டுமானால் கம்பெனிக் காரிலேயே போகலாம். அப்புறம் என்ன செலவு ஏற்படப்போகிறது!’ என்று திகைத்தான். சினிமா உலகம் அதிசயமானது. அது ஒரு தனி உலகம். காலத்தையும் பணத்தையும் பற்றிய கவலை அங்கு சஞ்சரிப்ப வர்களுக்குக் கிடையாது. சும்மா வெட்டிப் பொழுது போக்குவதுதான் அங்கே காணப்படும் பெரும்பாலரின் நோக்கம். தங்களை ஆடம்பரமாக அலங்காரம் செய்து கொள்வதிலும், ஜம்பம் பண்ணுவதிலும், திறமை இல்லா விட்டாலும் இருப்பது போல் நடிப்பதிலும், கடன் வாங்கி யாவது ஜாலி பண்ணுவதிலும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். திறமை என்று உண்மையாகவே கருதப்படுகிற அம்சத்துக்கு அவ்வுலகில் மதிப்புக் கிடையாது. உண்மை யான் திறமைசாலிகள் உண்மையாக உழைத்து உயர்வு காண்பது நிச்சயம் என்கிற நிலை எதுவும் அங்கு செல்லு படியாகாது. அவ்வுலகில் சுகமாக வாழவும், சிறப்பாக முன்னேறவும் முக்கியமான சில கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். மாதவன் அங்கு புகுந்த சில மாதங்களிலேயே இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து, அவ்வுலகில் நீடித்து வாழ்வதற்கு மட்டுமல்ல, நன்றாக முன்னேறுவதற்கும் தேவையான யுக்திகளையும் கற்றுக்கொண்டான். தீவிர மாகக் கையாண்டான். பலனும் பெற்றான். பிறவிப் பெருமாளுக்குக் கதை எழுதுவதிலும், வசனம் தயாரிப்பதிலும் உதவிபுரிந்தான். டைரக்டருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/77&oldid=923553" இலிருந்து மீள்விக்கப்பட்டது