பக்கம்:துணிந்தவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை துணிந்தவன் என்ற நாவல் 1959-ம் வருடம் சரஸ்வதி. ஆண்டு மலரில் முழுமையாகப் பிரசுரம் பெற்றது. அப்படி வெளிவருவதற்காகவே எழுதப்பட்ட நாவல் அது. துணிச் சலான முயற்சிதான். நண்பர் வி. விஜயபாஸ்கரன் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்காகவே சரஸ்வதி பத்திரிகையை நடத்தியதே துணிச்சலான செயல்தான். எட்டு வருட காலம் வளர்ந்த சரஸ்வதி இதழியல் வரலாற்றில் தடம் பதித்துள்ள சிறப் பான சிற்றிதழ் ஆகும். தமிழில் முற்போக்கு இலக்கியம் செழுமை பெறுவதற்கு சரஸ்வதி பெரிதும் உதவியுள்ளது. திறமை நிறைந்த படைப்பாளிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி வாசகர்களின் கவனிப்பைப் பெற்று வளர்ச்சி அடைவதற்கும் அது துணைபுரிந்தது. புதுமையான சிறு கதைகள், சிந்தனைக் கட்டுரைகள், தத்துவ விளக்கங்கள், நூல் விமர்சனங்கள், அயல்நாட்டு நாவல்களின் சுருக்கங்கள், இலக்கிய விவாதங்கள் என்று பலவகைகளிலும் சரஸ்வதி: சாதனை புரிந்து தனக்கெனத் தனி இடம் பெற்றிருக்கிறது. தனது சாதனைகளை எண்ணிப் பார்க்கும் விதத்தில் ஆண்டு தோறும் ஒரு இலக்கிய மலரை உருவாக்கியது. அந்த வகையில் 1959ல் உருவான ஆண்டு மலர் அற்புதமான தயாரிப்பு ஆகும். சிறந்த சிறுகதைகள், கட்டுரை கள், கவிதைகளுடன், தனிப் பகுதியாக துணிந்தவன் நாவல் மலரில் இடம்பெற்றிருந்தது. அது இலக்கிய வாசகர்களின் கவனிப்பையும் பாராட்டுதலையும் அதிகம் பெற்றுத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/8&oldid=923556" இலிருந்து மீள்விக்கப்பட்டது