பக்கம்:துணிந்தவன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§8 துணிந்தவன் ஸ்டார் ஆகிவிடலாம். நாமே படம் பிடிப்போம். அது தான் சிறந்தவழி என்று அவன் கூறிவந்தான். அவளும் அதற்கு இசைந்தாள். மாதவனே ஒரு கதை எழுதினான். ஜனங்களின் ருசிகளை நன்கு அறிந்து வைத் திருந்த அவன், அவர்களைத் திருப்தி செய்யக்கூடிய முறை யிலும், தன்னுடைய திறமையும் சம்பாவின் திறமையும் நன்கு சோபிக்கக்கூடிய வகையிலும், அருமையான கதை ஒன்றைத் தயாரித்தான். படம் வெற்றி பெறுவதற்குத் துணை புரியக்கூடியவர்களின் உதவியை எல்லாம் தேடிப் பிடித்துப் பயன்படுத்திக் கொள்ள அவன் தவறவில்லை. இதற்குள் விடிவெள்ளி'யின் இரண்டாவது படமும் வெளிவந்து, வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருந்தது. 14 மாதவன் நாட் குறிப்பு எழுதுவதில்லை. அப்படி எழுதினால், அதில் - பொன்னிற மை கிடையாத தால் - சிவப்பு மையால் பொறிக்கப்படவேண்டியது என அவன் கருதிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது ஒரு நாள். மாதவன் கடைவீதியில் கார் அருகில் நின்று கொண்டிருந்தான். சம்பா ஜவுளிக்கடைக்குள் சென்றிருந் தாள். வீதியில் அவ்வளவாகக் கூட்டமில்லாத நேரம், மேலும், 'ரசிகமகா ஜனங்களால் முற்றுகையிடப்படக் கூடிய அந்தஸ்தை அவ்விருவரும் இன்னும் பெறவில்லை. ஆகவே, அவர்கள் சாதாரணமாகக் கடைவீதியிலும் கட லோரத்திலும் காட்சிதர முடிந்தது. திடீரென்று அவன் பக்கத்தில் வந்து நின்ற ஒருவர் அவனைக்கூர்ந்து கவனித்தார். வாய்பிளந்து நின்றார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/80&oldid=923557" இலிருந்து மீள்விக்கப்பட்டது