பக்கம்:துணிந்தவன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 துணிந்தவன் மாதவன் அவளைக் கவனித்தான். அவள் முன்னை விடப் பருமனாக வளர்ந்திருந்தாள். குழந்தைகள் பெற்றத னாலும், மிதமிஞ்சிய தீவனத்தாலும், சுகவாசத்தாலும் அவள் உடல் பொலிவு குன்றிக் காணப்பட்டது. அவன் போற்றி வியந்த இனிய அழகு - பெண்மையின் பூரண செளந்தரியம் அவளை விட்டு விலகி மறைந்திருந்தது. 'அத்தான்? என்று முணுமுணுத் தன அவள் உதடுகள். 'ஏய்!” என்ற அதட்டல் அதிகார அடக்குமுறை கணவனிடமிருந்து பிறந்தது உரிமையோடு. 'இந்த அயோக்கியனா உன் அத்தான்? அப்படிச் சொன்ன வாயை வெந்திவிட்டு அலம்பு, முதல் காரிய மாக' என்று சங்கரலிங்கம் பிள்ளை சொன்னார். மாதவன் சிரித்தான். 'உனக்குத் தெரிந்திருந்த அத்தான் செத்து எத்தனையோ வருஷங்களாச்சு. நான் வேறு மாதவன். அந்தப் பழைய அப்பாவியையும், ஒரு பெளர்ணமியின்போது அவன் சொன்ன பேச்சுக்களையும் நீ மறந்துவிடலாம் அம்மா. அவசியம். மறந்துவிடத்தான் வேண்டும்' என்றான். 'இதென்ன நாடகம்? ஏனிவ்வளவு கும்பல்? என்று கேட்டுக்கொண்டே, குமாரி சம்பா, ஜவுளிப் பொட்டணத்துடன் மாதவன் அருகே வந்து சேர்ந்தாள். காரைத் திறந்து, ஜம்மென்று உட்கார்ந்தாள். உ.ம். ஏறலாமே!" என்றாள். மாதவன் எதுவுமே நடவாததுபோல். அங்கு நின்ற வர்களில் யாரையும் அறியாதவன்போல்.. காரில் அமர்ந் தான். அவனையும் அவன் அருகில் இருந்தவளையும் மாறி மாறிப் பார்த்த காந்திமதி பெருமூச்செறிந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/84&oldid=923561" இலிருந்து மீள்விக்கப்பட்டது