பக்கம்:துணிந்தவன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 73 அவள் கண்கள் கலங்கின. 'இங்கேயே நிற்பானேன்? உம், நட என்று அவ ளுக்கு உத்தரவிட்ட அம்பலவாணன் 'வாங்க மாமா' என்று கூறி, முன் நடந்தான். 'உம். எல்லாம் நம்ம தலைவிதி.... காலம் கெட்டுப் போச்சு என்று முனங்கிக்கொண்டே பின்தொடர்ந்தார் பிள்ளை. ić; மாதவன் 'தொட்டது அனைத்தும் துலங்கும் காலம் அது என்றே தோன்றியது. 'சம்பா ஆர்ட் புரடக்ஷன்'ஸின் முதல் படம் பிரமாதமான வெற்றி பெற்றது. அதன்மூலம் குமாரி சம்பா நட்சத்திர மதிப்பு பெற்றாள். மாதவன் புகழ் உயர்ந்து கொண்டே போயிற்று. ரசிக மகா ஜனங்களின் உள்ளத்திலே உறுதியான இடம்பெற்றுவிட்டான் அவன். மாதவன் ரொம்ப nரியஸ்' ஆகவும் நடிக்கவில்லை. ஒரே கோமாளிக் கூத்தும் அடிக்க வில்லை. ஹீரோவுக்கு வேண்டிய காம்பீர்யத்துடன் நடித் தான். அதே சமயத்தில் சிறிது கோமாளித்தனத்தையும் கலந்து அளித்தான். கத்திச்சண்டை செய்தான் அவன். அதைக் கூட, அமெரிக்கப் பட உலக நடிகன் ஒருவன் செய்வது போல தமாஷாகவும் சாமர்த்தியமாகவும் செய்து காட்டி, படத்தில்வரும் எதிரிகளை ஏமாற்றி, படம் பார்க்கிறவர் களைச் சிரிக்கச் சிரிக்கச் செய்தான். சிரத்தையோ கதை உருவாக்கி சிரமத்தோடு உழைத்து, பலரது ஒத்துழைப்பை யும் பெற்று, எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய அழகான கலைச் சித்திரத்தை அவன் தயாரித்துக் காட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/85&oldid=923562" இலிருந்து மீள்விக்கப்பட்டது