பக்கம்:துணிந்தவன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 துணிந்தவன் ஊர்வலம் வந்தபோது, எங்கும் ஏற்பட்ட பரபரப்பு: ஆகா, அதற்கு இணை அதுதான். பழங்கால ராஜாக்கள் அணிந்துவந்தது போன்ற பகட்டான அங்கிகளை, ரகம் ரகமாக வர்ணங்களில், தயார் செய்துகொண்டு நாளைக்கொரு தினுசாகவும் வேளைக்கு ஒர் விதமாகவும் சிங்காரித்துக்கொண்டு காட்சி அளித் தான் அவன். இவை எல்லாம் அருமையான சுய விளம்பரங் களாக உதவின. அவன் மக்களின் கவனத்தைக் கவர்ந் தான். எல்லோர் பேச்சுக்கும் பொருள் ஆனான். மங்கைய ரின் நினைவிலே நிழலாடினான். எழிலிகள், ஒய்யாரிகள், உல்லாசிகள் பலரது உள்ளத்திலும் நீங்காத இடம் முதன் முதலாக சம்பளம் என்று இருநூறு ரூபாய் கிடைத்ததும், இந்தத் தொகையை எப்படிச் செலவு செய் வது என்று புரியாது திகைத்த மாதவன் இப்போது ஆயிரம் ஆயிரமாக வீசி எறிந்து கொண்டிருந்தான். பணம் நம்ம செலவுக்குப்போதவில்லையே. எவ்வளவு வந்தாலும் கட்டுபடியாகாது போலிருக்குதே! என்று வருத்தப்படவும் செய்தான். குமாரி சம்பாவும் அவனுக்கு ஏற்ற தோழியாகத் தான் விளங்கினாள். அவள் நாகரிக முறைகளிலும், அலங் காரக் கலையிலும் தலை சிறந்தவளாகிவிட்டாள். அவள் செய்துகொள்ளும் சிங்காரிப்புகள் எல்லாம், அணிந்து கொள்ளும் ஆடைஅணிகள் எல்லாம், வெகு விரை விலேயே புதிய பாஷன் என்று எங்கும் பரவின. இதனாலெல்லாம், குமாரி சம்பாவும் மாதவனும் நடித்த படங்களுக்கு அமோகமான ஆதரவு கிட்டியது. எல்லாம் வெற்றி! எங்கும் மகத்தான வசூல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/88&oldid=923565" இலிருந்து மீள்விக்கப்பட்டது