பக்கம்:துணிந்தவன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 77 மாதவன் பணம் பெருகப்பெருக தாராளத்தனம் காட்டினான். பணம் என்பது செலவு செய்யப்படுவதற் காகத்தான். சேமித்து வைப்பதற்காக அல்ல் என்று கூறி னான் அவன். நாம் வாழ்வதோடு, மற்றும் பலரும் வாழட் டுமே என்று அவன் தர்ம ஸ்தாபனங்களுக்கும், சங்கங் களுக்கும், சேவா நிலையங்களுக்கும், பரோபகார விடுதி களுக்கும், தகுதி பெற்ற தனிமனிதர்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் வழங்கினான். அவன் பெயரும் புகழும் எங்கும் பரவின. சில 'மஞ்சள் பத்திரிகைகள் அவனைப் பற்றி வசை பாடின. அதற்காக அவன் வருந்தவில்லை. 'லட்சியப் பாதையில் நான் வெற்றிகரமாக முன்னேறுகிறேன் என்று தான் இதற்கு அர்த்தம்' என்று சொல்லிச் சிரித்தான் மாதவன்.

  1. 6

தனது வாழ்வின் வளர்ச்சி பற்றி திருப்திகொள்ளும் மாதவனின் உள்ளத்தில், அடிக்கடி ஒரு குறை வேதனையாக உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் நினைவில் ஒரு முகம் தோன்றும். கேலியாகச் சிரிக்கும். அந்தச் சிரிப்பொலி நீங்காது எதிரொலித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை எழும் அவனுக்கு. என்றோ ஒருநாள் எவளோ ஒருத்தி அவனைப் பார்த்துச் சிரித்தாளே அதை அவன் மறக்கவில்லை. அவன் நினைவு அவள் முகத்தை அழியாமல் பாதுகாத்து வந்தது. அவன் அகக் கண்கள் விழிப்புடன் ருந்து அவளுக்காக எங்கும் எப்பொழுதும் வலைவீசின. அவளை எப்படியும் சந்திக்கமுடியும் என்ற நம்பிக்கை அவனுள் அழுத்தமாகப் பதிந்து கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/89&oldid=923566" இலிருந்து மீள்விக்கப்பட்டது