பக்கம்:துணிந்தவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii துணிந்தவன் வித்தியாசமான நாவல். நாட்டின், சமூகத்தின், மனிதர்களின், வாழ்வின் பல துறைகளின் சிறுமைகளையும் சிதைவுகளையும் சீரழிவுகளையும் யதார்த் தமாக சித்தரிக்கும் சுவாரசியமான நாவல். அதன் கதாநாயகன் மாதவன் நல்லவனாக வளர்ந்து முப்பது வருடங்களுக்கு மேலாக நல்ல மனம் படைத் தவனாகவே வாழ்ந்தவன். வறுமை நிலையில் சிறுமைப் பட்டவன். சமூகமும் சூழ்நிலைகளும் காலமும் மனிதரை வெகுவாக பாதிப்பது போல, சிந்திக்கக் கற்றிருந்த அவனை யும் ஆட்டிப்படைத்தன. அனைவர் பேரிலும், அனைத் தின் மீதும் அவன் கசப்பும் வெறுப்பும் கொண்டான். இந்நிலைமைகள் மாறியாக வேண்டும் என மனப்பூர்வ மாக அவன் விரும்பினான். அது விரைவில் சாத்தியமாகக் கூடியதில்லை என உணர்கிற அவன் தானே மாறி, தன் வாழ்க்கையை வசதிகள் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளத் தீர்மானிக்கிறான். திட்டமிட்டு, துணிச்சலாகச் செயல்பட முற்படுகிறான். அவனது செயல்களையும், அவன் அடைந்த அனுபவங்களையும், அவன் பெற்ற வெற்றிகளையும் சுவையாக விவரிக்கிறதுநாவல். அவனுடைய சிந்தனைகளும், அவன் உதிர்க்கிற கருத்துக்களும் படிப்பவர்களை சிந்திக்கச் செய்பவை. நாட்டின் நிலைமையையும் மனிதர்களின் போக்குகளையும் நையாண்டித் தன்மையோடு எடுத்துச் சொல்பவை. இறுதிக் கட்டத்தில் அது ஒரு அரசியல் நாவலின் தன்மையையும் பெற்றிருக்கிறது. இந்த நாவல் எழுதப்பட்டு நாற்பது வருடங்களுக்கும் மேலாகியுள்ளது. எத்தனை எத்தனையோ மாறுதல்களும் வளர்ச்சிகளும் தேய்வுகளும் ஏற்பட்டுள்ளன. எனினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/9&oldid=923567" இலிருந்து மீள்விக்கப்பட்டது