பக்கம்:துணிந்தவன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கன்னன் 7g தான் எனனதான் வெற்றி பெற்றாலும், எவ்வளவு ஆடம்பரமாகவும் பெருமையோடும் வாழ்ந்தாலும், இனம் தெரியாத அந்த அலங்காரியைச் சந்தித்து அவளுக்குச் சரியான பாடம் கற்பிக்காவிட்டால், தன் உள்ளத்தில் அமைதி ஏற்படவே ஏற்படாது என்றே தோன்றியது அவ னுக்கு, தனக்கு இதுவரை துணைபுரிந்து தன்னை ஊக்கு வித்த காலம் என்றாவது ஒரு நாள் அவளையும் தன் முன் கொண்டுவந்து நிறுத்தாமல் போகாது என்று அவன் திட மாக நம்பினான். --- அவனுடைய நம்பிக்கை பொய்த்து விடவில்லை. ஒரு நாள் காலையில் மாதவன் சாரட்டில் கிளம்பி, 'மன அமைதி நாடி ச் செல்வதாகச் சொல்லி வெகுதுரம் சென்றான். பல மைல்களுக்கு அப்பாலுள்ள அழகிய சிற்றுர் ஒன்றை அடைந்து, அவ்வூர் ஒரமாக அமைதி யோடு திகழும் கடற்கரைப் பக்கம் சேர்ந்தான். அங்கு சிறிது நேரம் போக்கிவிட்டுத் திரும்பும்போது மணி பதினொன் றிருக்கலாம். நல்ல வெயில். பட்டணத்துக்கு இரண்டு மைல் தள்ளி, ஜனநடமாட்டம் இல்லாத ரஸ்தாவில், ஒரு கார் அசைவற்று நின்றது. அதன் அருகே ஒரு ஒய்யாரி கவலை படர்ந்த முகத்தோடு நின்றாள். அந்த முகத்தைக் கண்டதும் மாதவனின் உள்ளம் குதுகலித்தது. அவன் முகம் மலர்ச்சியுற்றது. வண்டியை அக்காரின் சமீபமாக - மிக மெதுவாய் - செலுத்தும் படி அவன் சாரதிக்கு உத்தரவிட்டான். அவன் பார்வை அவள் முகத்திலேயே பதிந்து நின்றது. அவள் இமைகள் படபடத்தன. குழப்பத்தோடு அவள் அப்படியும் இப்படியும் முகம் திருப்பினாள். சற்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/91&oldid=923569" இலிருந்து மீள்விக்கப்பட்டது