பக்கம்:துணிந்தவன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 81 அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவளை முதன் முதலில் பார்த்துப் பல வருஷங்கள் கழிந்திருந்த போதிலும், அவள் முன்போலவே இளமையோடு, அழகோடு, குளுமையான சிங்காரத் தோற்றத்தோடுதான் காட்சி தந்தாள். 'இவள் நினைவுத் திறனும் பசுமையாகவா இருக்கும்” என்று வியப்படைந்தான் அவன். அவளுடைய சிரிப்பு ஒருவாறு அடங்கியதும் அவள் சொன்னாள்: 'உங்களை இந்த நாட்டின் பச்சைக் குழந்தைகூட இனம் கண்டுகொள்ளுமே அவ்வளவு புகழ் இருக்கிறது உங்களுக்கு. நீங்கள்தான் பெரிய ஸ்டார் ஆச்சுதே....” - அவன் மனப்பாரம் நழுவி விழுந்தது. அப்பாடா: - இவளுக்குப் பழைய நினைவு இல்லை, இருக்கமுடியாது. நடுத்தெருவில் திரிந்துகொண்டிருந்த எவனோ ஒருவனைப் பற்றி இவள் ஏன் எண்ணிக்கொண்டிருக்க வேண்டும்! அப்படி நான் நினைத்ததே பேதைமையில்லையா? .... அவன் உள்ளம் சிரித்தது இப்படி. 'உங்கள் காருக்கு என்ன? பெட்ரோல் இல்லையா?" என்று கேட்டான் அவன். 'பெட்ரோல் எல்லாம் இருக்குது. என்னவோ பிரேக் ஆயிட்டுது. யாராவது ஒரு ஆளை அனுப்பித்தான் சரிப்படுத்தச் சொல்லணும். அதுவரை கார் இங்கேயே கிடக்க வேண்டியதுதான்.” "நீங்கள் ரொம்ப நேரமாக இப்படி நிற்கிறீர்களா?” 'முக்கால் மணிக்கும் அதிகமிருக்கும்!” அடடா!' என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/93&oldid=923571" இலிருந்து மீள்விக்கப்பட்டது