பக்கம்:துளசி மாடம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 துளசி மாடம்


பாடல்கள், கிராமியப் பாடல்களில் வாய்மொழி அடை யாளம்கிற ஒரல் டிரடிக்ஷன்' தான் ரொம்ப ரொம்ப முக்கியம். கொச்சைகளையும் தப்புகளையும் அவற்றி லிருந்து நீக்கி விட்டால் அப்புறம் அவை அசல் கிராமீயப் பாடல்களாக இருக்கவே முடியாது!’

“இங்கே சில பேர் இந்த மாதிரிப் பாடல்களைக் கூட இலக்கண சுத்தமாகத் திருத்தி விடுவதை ஒரு வழக்க மாக்கியிருக்காங்க..." .*

'சுமாரான விஷயங்களைப் பிரமாதப்படுத்திச் சீர் திருத்தம் செய்யப் புறப்படுவதும், பிரமாதமான விஷயங் களைக் கவனிக்காமலே பாழடைய விட்டு விடுவதும் அரசியல்வாதிகளால் புதிதாக உங்கள் தேசத்துக்கு வழங்கப்படும் நியு ஸப்கல்சர்' ஆகி வருகிறது."

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது மிகப் பெரிய விஷயத்தை-முந்நூறு நானூறு பக்கங்களில் விமர்சித்து எழுத வேண்டிய ஒன்றைச் சுலபமாக ஒரே ஒரு வாக்கி யத்தில் கமலி கச்சிதமாகச் சொல்வி முடித்து விட்டாற் போல உணர்ந்தாள் வசந்தி. சுதந்திரத்துக்குப் பின் வந்திருக்கும் புதிய இந்தியாவை இந்த ஒரு வாக்கியம் அத்தனை பொருத்தமாக விமர்சித்தது. பி த் த ைள அம்மாவைப் பந்துகள், கழற்சிக்காய்கள், சோழிகள், பல்லாங்குழி, விளையாடப் பயன்படும் முருங்கை முத்துக் கள், மரத்தில் அழகாகச் செதுக்கப்பெற்ற பல்லாங்குழி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்து

விவரம் விசாரித்துத் தெரிந்து கொண்டாள் கமலி.

அந்த வெள்ளை யுவதி தமிழ் பேசியது காமாட்சி யம்மாளுக்குப் பெரிதும் ஆச்சரியமளித்தது. வாழ்நாளில் தன் குரலைத் தானே திரும்பிக் கேட்கும் வாய்ப்பு காமாட்சியம்மாளுக்கு இதுவரை வாய்த்ததே இல்லை. காமாட்சியம்மாளைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கருதின வசந்தி கமலியிடம் ரிக்கார்டரை இயக்கி மாமியின் பதிவுசெய்த பாடலை அவளே திரும்பக் கேட்கும் விதத்தில் ஒவிக்கச் செய்யும்படி வேண்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/100&oldid=579816" இலிருந்து மீள்விக்கப்பட்டது