பக்கம்:துளசி மாடம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 துளசி மாடம்


வெளி தேசத்திலேயிருந்து வந்தவள் இதையெல்லாம் ஆர்வமாகக் கேட்கிறாளேங்கற வரை மாமிக்கும் பிரிய மாகத்தான் இருக்கு. ஆனா...' "ஆனா... என்ன ?..." “ரவிக்கும் கமலிக்கும் இருக்கிற நெருக்கத்தைப் பத்திச் சொன்னா அதை மாமியாலே ஜீரணிச்சுக்க முடியுமான்னுதான் தெரியலே..."

'உறவுகளுக்கு முதல் படியா இரண்டு தரப்பிலேயும் நம்பிக்கையை வளர்க்கணும். அதுதான் டிப்ளமளி வசந்தி !" என்று புன்முறுவலோடு சொன்னார் வேணு LDITLD IT. -

ரொம்ப அவசரப்பட்டு எந்த விஷயத்தையும் பேருக்கு நேராகச் சொல்லிக் காரியத்தைக் கெடுத் துடாதே அம்மா ! காமு அவ ஏற்கனவே நெனச்சுண்டி ருக்கிற படியே கொஞ்ச நாளைக்கு நெனைச்சுண்டிருக் கட்டும். உடனடியா ஆத்திலே ஒரு கலகம் வேண் டாம். விஷயத்தை அவளே மெல்ல மெல்லப் புரிஞ் சுக்க விடு ! புரியறதுலே எத்தனைக்கெத்தனைச தாமசமாறதோ அத்தனைக்கத்தனை நாம கொஞ் நாள் நிம்மதியாயிருக்கலாம்" என்றார் சர்மா.

வேனுமாமாவும் வசந்தியும் எத்தனை சுபாவமாக ரவி கமலி உறவு பற்றிய உரையாடலைப் பரிமாறிக் கொண்டார்களோ அத்தனை சகஜமாகவோ சுபாவ மாகவோ சர்மாவால் அதைப் பற்றிப் பேசவோ நினைக் கவோ முடியவில்லை, உண்மையில் அதைப் பற்றிக் கவலையும், பயமும் எண்ணற்ற தயக்கங்களும் அவருக்கு இருந்தன.

அன்று இரவு ரவியையும். கமலியையும் தம் வீட்டில் டின்னருக்கு அழைத்தார் வேனுமாமா.

'நீரும் வரலாமே...? வந்தால் என்ன ?' என்று வேணு மாமா சர்மாவை அழைத்தபோது அவர் வருவார் என்பதை நம்பி அழைப்பதாகத் தோன்றவில்லை. வர மாட்டார் என்ற முடிவுடன் ஒப்புக்கு அழைத்ததாகவே தோன்றியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/102&oldid=579818" இலிருந்து மீள்விக்கப்பட்டது