பக்கம்:துளசி மாடம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 துளசி மாடம்


விவசாயிகள் பின் தொடரச் சீமாவையர் தெருவில் மிடுக்காக நடந்து போன காட்சி மீண்டும் சர்மாவுக்கு நினைவு வந்தது.

இந்தக் கூட்டத்துக்கும் அந்தக் காட்சிக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. சோழியன் குடுமி சும்மர் ஆடாது' என்பது போல் சீமா வையர் காரியமில்லாமல் தெருவில் ஆள சேர்த்துக் கொண்டு போகமாட்டார் என்றும் புரிந்தது.

கிராமங்களில் பெரும்பாலும் இம்மாதிரிக் கூட்டங் கள் இரவு எட்டு மணிக்குமேல் தொடங்கிப் பத்து மணி பதினோரு மணி வரையில் நடப்பதுண்டு. எல்லா விவசாயிகளும் வந்து கலந்துகொள்ள அந்த நேரம் தான் வசதியாயிருக்கும். சங்கரமங்கலமோ நூற்றுக்கு நூறு சதவீதம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட கிராமம், வான் பொய்த்தாலும் தான் பொய்யாத வளத்தை உடைய ஜீவநதியாகிய அகஸ்திய நதியின் தலைக்கால் பாசனத்தில் அமைந்திருந்ததால் மண்ணில் பொன் கொழித்தது. அதிலும் மடத்து நிலங்கள். எல்லாம் விளைச்சலுக்குப் புகழ் பெற்ற அகஸ்திய நதி யின் நல்ல கரைப் பகுதிகளில் இருந்தன. மடத்தின் பிரதானமான சொத்துக்களாகிய நல்ல நிலங்கள், தோப்புத் துரவுகள், இரண்டு மூன்று பசு மடங்கள், விவாகமண்டபம், வீடுகள், காலி மனைகள் எல்லாம் அந்த ஊரில்தான் இருந்தன. -

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்வரை பூர் ம்டத்தின் வைதிக விஷயங்களுக்கு மட்டுமே சர்மா பொறுப்பேற்றிருந்தார். நிலம் குத்தகை வருமானம், வீடு விவாக மண்டப வாடகைகள், வரவு செலவு போன்ற லெளகீக ஏற்பாடுகளைச் சீமாவையர்தான் கவனித்து வந்தார். குத்தகைப் பணவரவு செலவுகளில் ஊழலும், கையாடலும் பெருகியபின், நிறையப் புகார் கள் வரவே பின்னால் அந்தப் பொறுப்பும் சர்மா வுக்கே வந்து சேர்ந்தது. -

மோவையரை விரோதித்துக் கொள்ளச் சர்மா பயந் தார். ஆனாலும் வேறு வழி இல்லை. சுவாமிகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/106&oldid=579822" இலிருந்து மீள்விக்கப்பட்டது