பக்கம்:துளசி மாடம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 துளசி மாடம்


. சீமா வையர் தெருவில் ஆட்கள் பின் தொடர நடந்து சென்றதைப் பற்றி யோசித்த சர்மா மடத்துக் குமாஸ்தா கொடுத்துவிட்டுச் சென்றிருந்த கடிதங்களை ஒவ்வொன் றாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.

முதல் கடிதமே இறைமுடிமணி அவரிடம் வந்து வாட கைக்குக் கேட்டுவிட்டுப் போயிருந்த வடக்குத் தெருவி லுள்ள மடத்துக்குச் சொந்தமான காலிமனையைப் பற்றியதாக இருந்தது.

"ஒழுங்காக வாடகை தரக்கூடிய யோக்கியமான பார்ட்டிக்கு அந்த இடத்தைச் சர்மிாவாகப் பார்த்து. வாடகைக்கு விட்டு விடலாம்" என்று பூர் மடம் மானேஜர் பதில் எழுதியிருந்தார். இரண்டாவது கடிதத்தில் நிலங் களைக் குத்தகைக்கு அடைக்கும்போது பெரிய பணக் காரர்களிடமும் வசதியுள்ள மிராசுதார்களிடமும் அடைத்து விடாமல் ரீமடத்துக்கு நாணயமாக நடந்து கொள்ளக் கூடிய உழைக்கும் திறனுள்ள ஏழை விவசாயி. களுக்குப் பயன்படுமாறு பகிர்ந்து அடைப்பது நல்லது என்று சுவாமிகளே அபிப்பிராயப்படுவதாகக் கடிதத்தில் எழுதியிருந்தது. சில ஏழைகளின் முகத்தைக் காட்டி அவர்களுக்குப் பண உதவி செய்து அவர்கள் பெயரில் அவ்வூர் மிராசுதார்களே பெரும்பாலான நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பதாக மடத்துக்கு வந்திருந்த புகார்க். கடிதங்கள் இரண்டொன்றும் இணைக்கப்பட்டிருந்தன.

அடுத்த கடிதம் சுற்று வட்டாரத்துப் பள்ளிக்கூடங் களில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பகவத்கீதை, திருக்குறள் பகுதிகளில் மனப்பாடப் போட்டி வைத்துப் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்ற சுவாமிகளின் ஆக்ஞையை விவரமாகத் தெரிவித்தது. -

மடத்திலிருந்து வந்த நான்காவது கடிதத்தில் சமஸ். இருத வேத பாடசாலை பற்றிய சில விஷயங்களை விசாரித்திருந்தது. மற்றொரு கடிதத்தில் அகஸ்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/108&oldid=579824" இலிருந்து மீள்விக்கப்பட்டது