பக்கம்:துளசி மாடம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 துளசி மாடம்


- இறைமுடிமணி சிரித்தபடியே இப்படிக் கேட்டார்.

“நம்பிக்கைக்கென்ன கொறைச்சல் ? நாளைக்கி வாயேன் பேசி முடிவு பண்ணிப்போம்" என்று சொல்லிய படியே புறப்பட இருந்த சர்மாவிடம் “சரி! நாளைக்கி வரேன். முடிவு பண்ணிக்கலாம். ஒரு நிமிஷம் நில்லு ! உங்கிட்ட வேற ஒரு முக்கியமான சமாசாரம் காதிலே போட்டு வைக்கணும்" என்றார் இறைமுடி மணி.

"என்ன, சொல்லேன்" என்ற சர்மாவுக்குப் பதில் கூறாமல் கடையின் உட்புறம் உட்கார்ந்திருந்தவர்களின் பக்கம் திரும்பி "இந்தா மலர்க்கொடி, இங்கே வாம்மா" என்று ஒரு பெண்ணை நோக்கிக் குரல் கொடுத்தார் இறைமுடிமணி.

கருநிற வாயில் புடவை அணிந்த ஒர் இளம்பெண் எழுந்திருந்து வந்தாள். மாநிறமாயிருந்தாலும் கட்டழ கோடிருந்த அந்தப் பெண் அருகே வந்ததும்,

"இது மலர்க்கொடி ! இங்கே புனித அந்தோணியார் ஆரம்பப் பள்ளியிலே டீச்சரா வேலை பார்க்குது. நம்ம இயக்கத்திலே ரொம்ப ஈடுபாடுள்ள பொண்ணு. பதினெட்டு வருசத்துக்கு முந்தி நம்மூர் ஆற்றங்கரை மைதானத்திலே முதல் சீர்திருத்த மாநாடு நடந்திச்சே, அப்ப ஒரு லயசுக் குழந்தை இது. ராக்காயின்னு முன்னாடியே வைச்சிருந்த பேரை மாத்தி ஐயா கிட்டக் கொடுத்து வேறே பேரு வையுங்கன்னாங்க. ஐயா அப்பத்தான் இந்தப் பேரைச் சூட்டினாரு. போகட்டும். அதெல்லாம் பழைய சமாசாரம். இப்போ நான் சொல்ல வந்தது வேறே கதை. அந்தி சந்தியிலே ஸ்கூல் விட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்து போறப்ப நடு வழிலே உங்க சீமாவையரு மாந்தோப்பு இருக்கு ; அந்த மாந்தோப்பு வழியாகத்தான் திரும்பிப்ப்ோகுது இது. ஒரு நா-ரெண்டு நா-வழி மறிச்சு வம்பு பண்ணி னாராம். இன்னொரு நா கையைப் புடிக்க வந்தாராம். ஒடித் தப்பியிருக்கு. நீ கொஞ்சம் அந்த ஆளைக் கண்டிச்சு வையி... நாங்க இயக்க ரீதியா இதைப் பெரிசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/110&oldid=579826" இலிருந்து மீள்விக்கப்பட்டது