பக்கம்:துளசி மாடம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 109


படுத்த முடியும். வேண்டாம்னு பார்க்கிறேன். எதுக்கும் நீ சொல்லிக் கண்டிச்சு வையேன், உ ன் ன ா லே. முடியும்னா..."

"தேசிகாமணி அவன் பெரிய துஷ்டன் ! நான் சொல்லித் திருந்தறவன் இல்லே. ஊர்ல பெரிய மனுஷன், பணக்காரன். பணமுள்ளவனா இருந்தாலும் குண வானா இருந்தா யோக்கியதை இருக்கும். இன்னிக்குக்கூட சாயரட்சை தெருவிலே நாலு ஆள் சகிதம் ஜரிகை அங்க வஸ்திரம் பளபளக்க மிடுக்கு நடை நடந்து போறப்போ சீமாவையர் என் பிள்ளை ஊர்லேயிருந்து வந்தது பற்றி என்னிடம் விசாரிச்சான். நானும் சுமுகமாக இரண்டு வார்த்தை பதில்பேசினேன்." 'தம்பி வந்தாச்சா ?" 'வந்தாச்சு நாளை வர்றப்போ நீ பார்த்துப் பேச லாம். வீட்டுக்கு வாயேன்."

“ஏதோ காதல் பிரச்னைன்னு சொன்னியே, அது என்னாச்சு ?" -

'பிரச்னையும் கூடவே தம்பியோடப் புறப்பட்டு வந் திருக்கு வந்து பாரேன்."

"ஏன் அப்படிச் சொல்றே ? அவன் பிரச்னையில் வீணாக நீ தலையிட்டு அதிகாரம் பண்ணாதே." -

"தலையிடறதோ அதிகாரம் பண்றதோ எனக்குப் பழக்கமில்லே தேசிகாமணி !” -

"சரி. நேரே வந்து தம்பிகிட்டப் பேசிக்கிறேன், தி - - "י.GLI rr

சர்மா விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப் பட்டார். இறைமுடிமணியிடம் சீமாவையரைப் பற்றிக் கேள்விப்பட்ட சம்பவம் போலப் பல சம்பவங்கள் பல புகார்கள் பல இடங்களிலிருந்து பல முறை அவர் காதுக்கு எட்டியிருந்தன. தேக்கு மரத்தில் செதுக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/111&oldid=579827" இலிருந்து மீள்விக்கப்பட்டது