பக்கம்:துளசி மாடம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி இ 1 11

டார் அவர். கடிதங்களையும் மடத்துக்குக் குத்தகை விவரங்களடங்கிய பெரிய பைண்டு நோட்டுப் புத்தகம் ஒன்றையும் ஒரு மடிசஞ்சிப் பையில் போட்டுக் கையில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

போகிற வழியில் வேனுமாமாவின் வீட்டிலிருந்த கலகலப்பையும் விளக்கொளி அலங்காரத்தையும், வாசலில் நின்ற கார்களையும் பார்த்தால் விருந்து முடிந்து ரவியும் கமலி முதலியவர்களும் வீடு திரும்ப இரவு பதினோரு மணிக்கு மேலேகூட ஆ க லா ம் என்று தோன்றியது. - -

பூரீமடம் கல்யாண மண்டபத்துக்கு அருகே தெருவில் திரும்பி அவர் செல்லும் திசைக்கு எதிர்த் திசையி லிருந்து வந்து கொண்டிருந்த ஒரு விவசாயி மேலா டையை இடுப்புக்கு இறக்கியபடி, பணிவாக 'சாமி! குத்தகைக் கூட்டம் இன்னிக்கு இல்லேன்னாங்களே... பெறவு எண்ணைக்கு வரனும் ?" என்று வினவினான்.

"யார் சொன்னா அப்படி ? கூட்டம் இன்னிக்குத் தான் நடக்கப் போகுது, வா" என்றார் அவர்.

'சீமாவையரும் அ வ ரு ஆளுங்களும் இன்னிக்கு இல்லேன்னு சொன்னாங்களே சாமி ?" -

'நீ பேசாமே எங்கூட வா சொல்றேன்." சர்மா அந்த விவசாயி பின்தொடரக் கல்யாண மண்டபத்துக்

குள் நுழைந்தார். வழக்கமாகக் குத்தகைக் கூட்டத்துக்கு

வரும் திரளான விவசாயிகள் யாரையும் அப்போது அங்கே காணவில்லை. கல்யாணக் கூடத்தில் சீமாவைய ரும் அவருடைய கையாட்களாகிய நாலைந்து விவசாயி களும் மட்டுமே நடுவாக அமர்ந்திருந்தனர்.

சுற்றுப்புறத்துப் பதினெட்டுக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து ஆர்வத்தோடு குத்தகை கேட்கும் வளமான மடத்து நிலங்களைக் கேட்க அன்று யாருமே வரவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாகவும் நம்ப முடியாமலும் இருந்தது.

مسمت محم".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/113&oldid=579829" இலிருந்து மீள்விக்கப்பட்டது