பக்கம்:துளசி மாடம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 113


கொண்டிருந்தாள். பாட்டியின் விசாரணை கமலியைப் பற்றி இருந்ததைச் சர்மாவே தம் செவிகளால் கேட்ட வாறுதான் வீட்டுப் படியேறினார்.

காமாட்சியம்மாள் பாட்டிக்குக் கமலியைப் பற்றி என்ன சொல்ல இருந்தாளோ தெரியவில்லை ஆனால் அவள் பதில் சொல்வதற்குள் சர்மா படியேறி வந்து விட்டார்.

"அவாள்ளாம் இன்னும் வரலையா ?" “எவாளைக் கேக்கறேள் ?" “பார்ட்டிக்குப் போனவாளைப் பத்தித்தான் கேட்கிறேன்..."

"வரலை. இன்னும் நிறைய நாழியாகாதோ ? இத்தனை சீக்கிரமா எங்கே வரப்போறா ?"

சர்மாவைப் பார்த்ததும் பாட்டி எழுந்து போய்ச் சேர்ந்தாள். அரைமணி நேரத்தில் பார்வதியும் குமாரும் மட்டுமே வேனுமாமா வீட்டிலிருந்து திரும்பி வநதாாகள. -

ஏண்டா ? அவாள்ளாம் எங்கே ? வரலையா ?" "இல்லேப்பா ! பார்ட்டியிலே அந்த எஸ்டேட் ஒனர் சாரங்கபாணி நாயுடு வந்திருந்தார். அவர் திடீர்னு பார்ட்டி முடிஞ்சதும் அண்ணாவையும் அவன்கூட வந்திருந்தவாளையும் "வாங்களேன் மலையிலே நம்ம எஸ்டேட் கெஸ்ட் ஹவுசிலே போய்த் தங்கிட்டுக் கார்த். தாலே திரும்பிடலாம்’னு கூப்பிட்டார். உடனே, நைஸ் ஜடியா'ன்னு அண்ணாவும் கமலியும் வேணு மாமாவும் வசந்தியுமா ரெண்டு கார்லே மலைக்குப் புொறப்பட்டுப் போயிட்டா." -

"யாரு ? நாமக்கார நாயுடுதானே ?" "அவரே தாம்பா..." குமார் சொல்லியவற்றைச் சரியாகக் காதில் போட்டு கொள்ளாத காமாட்சியம்மாள், "ஏன்னா ? அவாள்ளாம.

து-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/115&oldid=579831" இலிருந்து மீள்விக்கப்பட்டது