பக்கம்:துளசி மாடம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 117


விடுவதை ரவி உணர்ந்திருக்கிறான். இந்த இரண்டு இடங் களிலும் திடீரென்று மனிதனுக்கு வயது குறைந்து விடு கிறது. மூப்பு விலகி ஓடி விடுகிறது. தளர்ச்சி, தயக்கம் எல்லாம் பறந்து போய் உடனே உற்சாகம் வந்து விடு கிறது. மலையாயிருந்தாலும், உயரப்பறக்கும் விமானமா யிருந்தாலும் மேலே ஏறும் மாடிப் படியாயிருந்தாலும்மேலே ஏறிச் செல்கிறோம் என்ற உணர்வே ஓர் உற்சாகம்தான். -

கார் தரை மட்டத்திலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வந்ததும் காற்றுக் காதை அடைத்தது. குளிர் அதிக மாகவே கார்க் கண்ணாடிகளை உயர்த்திவிட்டான் ரவி. கமலி இவன் மேல் துவளும் ஒரு மெல்லிய இதமான பூமாலையைப் போல் சாய்ந்து துங்கிக் கொண் டிருந்தாள்.

நிர்த்தாட்சண்யமான கண்டிப்புடன் தந்தை எழுப்பி விட எழுந்திருந்து அந்த அதிகாலைக்கே உரிய சுகமான துரக்கத்தின் கிறக்கத்தோடு நடந்து போய்ப் பூக்களின் மதுரமான வாசனை நிறைந்த தோட்டக் கிணற்றடியில் சில்லென்ற பச்சைத் தண்ணிரின் குளிர்ச்சியில் தள்ளாடும் து.ாக்கத்தைக் கரைத்துவிட்டுத் தந்தைக்கு முன் பாடம் கேட்க அமர்ந்த வேளைகளில் இந்த அந்நிய நாட்டு 'உத்தியோகம், இப்படி ஒர் அழகிய காதல் - எதையுமே

அன்று அவன் கனவுகூடக் கண்டதில்லை.

ஆனால் நடந்தவையெல்லாம்-உண்மை என்பதற்கு அடையாளம் போல் கமலி அவன் தோளில் சாய்த்தபடி துரங்கிக் கொண்டிருந்தாள். வாசனைகளின் உருவக மாய் உறங்கும் இனிமையின் நிசயத சங்கீதமாய் நிகழ்ந்த வற்றின் நிலையான சாட்சியாய், இதமான தன்மையும் வெப்பமும் இணைந்த அந்த நளினம் அவன் தோளில் கொடியாய்ப் படத்திருந்தது. - - -

இரவு நேரமாக இருந்ததாலும், மலைச் சாலையில் நிறைய ஹேர்ப்பின் வளைவுகள் இருந்ததாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/119&oldid=579835" இலிருந்து மீள்விக்கப்பட்டது