பக்கம்:துளசி மாடம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 119


"சுமுகமாய் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதே சமயத்திலே கோபமாக இருந்ததாகவும் சொல்றத்துக் கில்லே..." . -

'நீ கொஞ்சம் பொறுமையாயிருந்துதான் அவ மனசை ஜெயிக்கணும். என் அம்மாவின் வயசை ஒத்த தலைமுறையைச் சேர்ந்த இந்தியத் தாய்மார்களுக்கு நெஞ்சழுத்தம் அதிகம். சுலபத்தில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்." . -

“நம் உறவின் நெருக்கத்தைப் பற்றிய சந்தேகமும் பயமும் இன்னும் உங்கள் அம்மாவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது ! நான் கையில்லாத ரவிக்கை அணிந்தது உங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்று வசந்தி வந்து சொன்னாள். நான் உடனே கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொண்டுதான் அம்மாவுக்கு முன்னால் போனேன்." - vá.

"நீ எதை அணிந்து கொள்ளக் கூடாது எதை அணிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அம்மா கோபித்துக் கவலைப்படுகிறாள் என்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான் கமலி ஒரு பெண் எப்படி உடுக்க, வேண்டும், எங்கே நிற்க வேண்டும், எப்படி இருக்க: வேண்டும் என்றெல்லாம் அந்தப் பெண்ணின் காதல னுடைய தாய் கவனிக்கவும் கண்காணிக்கவும், கவலைப் படவும் கோபித்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டாலே அவள் அந்தப் பெண்ணின் மாமியாராகத் தன்னைக் கருதிக்கொள்ளத் தொடங்கிவிட்டாள் என்று தான் அர்த்தம்." • , , - .

இதைக் கேட்ட கமலி சிரித்தாள். ரவியும் அவளோடு: சேர்ந்து வாய்விட்டுச் சிரித்துவிட்டான். காமாட்சி யம்மாளின் இனிய குரல் பாடும் திறமை, அம்மானை' யாடும் அழகு எல்லாவற்றையும் வியந்து கூறிவிட்டு, "உங்கள் நாட்டுப் பெண்கள் நுண்கலைக் களஞ்சியங்க ளாக இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருக்கி றது" என்றாள் கமலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/121&oldid=579837" இலிருந்து மீள்விக்கப்பட்டது