பக்கம்:துளசி மாடம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 123


காதுகளும் அந்த வேகத்திலே ரத்தம் கன்றிச் சிவந்து போயிடும்" என்று எச்சரித்தாள் வசந்தி.

முதலில் வேனுமாமா, ரவி, நாயுடு ஆகியோர் அருவி நீராடலை முடித்துக் கரையேறினார்கள். கமலி யும் வசந்தியும் விளையாட்டுக் குழந்தைகள் போல அருவி நீரைவிட்டு வெளியேற மனமில்லாமல் நீரில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.

நேரமாகவே, ரவியும் வேனுமாமாவும் குரல் கொடுத்தார்கள். பின்பே அவர்கள் கரையேறினார் கள். வசந்தி சொன்னது போல இப்போது எண்ணெய் முழுவதும் நீங்கித் தன் தலைமயிர் பட்டுப்போல் மென்மையாகவும் மழமழப்புள்ளதாகவும் ஆகியிருப் பதைக் கமலி தொட்டுப் பார்த்து உணர்ந்து வியந்தாள் எரித்துக் கரையேறிய ாயுடுவின் லையில் raಷಿಸಿ ನಿ மதி தேரி.ே அவருடைய வழுக்கைத் தலை தேய்த்து செப்புப் பாத்திரம் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந் தது. வேணுமாமா நாயுடுவைக் கேவி பண்ணினார்.

என்ன நாயுடுகாரு-தலையிலே ஒண்ணுமே இல்லையே ? எல்லாம் சுத்தமாப் போயிடுத்துப் போலிருக்கே!" -

"வாக்கியம் சரியா அமையலியே மாமா? வேற ஏதோ அர்த்தப்படறாப்பலே இருக்கே? கேட்கிற கேள்வியை எதுக்கும் தெளிவாக் கேட்டுடுங்கோ" என்றான் ரவி.

'கோட்டாப் பண்ணாதீங்க. மயிர் உதிர உதிர அத்தனையும் அநுபவ முதிர்ச்சியாக்கும். உங்களுக்கும் நடுவாக வழுக்கை விழத் தொடங்கிடிச்சு, சீக்கிரம் நம்ம கட்சிக்கு வந்திடுவீங்க ஜாக்கிரதை' என்று பதிலுக்கு வேணுமாமாவைக் கிண்டல் செய்தார் நாயுடு.

‘நாயுடுகாரு நல்லவேளையா நல்ல தேசத்திலே இன்னம் இது ஒண்னுக்குத்தான் தனியா ஒரு கட்சி இல்லே. போற போக்கைப் பார்த்தால் இதுக்கும்கூட யாராவது ஒரு கட்சி தொடங்கிடுவீங்க போலிருக்கே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/125&oldid=579841" இலிருந்து மீள்விக்கப்பட்டது