பக்கம்:துளசி மாடம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 துளசி மாடம்


தொடங்கினா என்ன தப்புன்னேன்?’ "தப்பு ஒண்ணுமில்லே எவ்வளவு மொத்தம் பாபுலே ஷனோ அவ்வளவு பேரும் ஆளுக்கொரு கட்சி தொடங் கிட்டா அப்புறம் ஒட்டுப் ப்ோடறதுக்குன்னு தனியா யார்தான் மீதமிருப்பாங்க? ஒரொரு கட்சிக்கு ஒரொரு வோட்டுத்தான் விழும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு சொல்றாப்ல எல்லோரும் இந்நாட்டுத் தலைவர்னு ஆயிடும். மக்கள்னு தனியா யாரும் மீதமேயிருக்க மாட்டாங்க.

அருவி நீரில் குளித்த குவியில் வேணுமாமாவும் நாயுடுவும் வாலிபர்களாகியிருந்தார்கள். அதனால் பெண்கள் உடை மாற்றிக் கோண்டு வரும்வரை நாயுடு வின் அரசியல் விமர்சனம் தொடர்ந்தது.

'பார்க்கப் போனா நம்ம நாட்டு அரசியலும் "ப்ளாண்டேஷனும் ஒரே மாதிரிதான் இருக்குதுங்க. பயிரிடறது, அறுவடை செய்யிறது, களையெடுக்கிறது எல்லாம் இரண்டுக்கும் பொதுவானதாக இருக்கும். "ப்ளாண்டேஷன்” பாஷையிலேதான் அ டி க்க டி அரசியலைப் பத்தியே பேசிக்கிறாங்க. யாராவது இளைஞர்கள் முன்னுக்கு வந்தா மொளச்சு மூணெலைப்

போடறதுக்குள்ளே தலைவனாயிட்டான்கிறாங்க. 'எலெக்ஷன்ல செலவழிச்சான். இப்ப அறுவடை' பண்ணிட்டான்கிறாங்க. புல்லுருவிகளைக் கட்சி

யிலேருந்து களையெடுத்துட்டோம்'கிறாங்க.'

"ஏதேது? இதைப் பற்றி ஒரு பெரிய தீலிஸ் எழுதற அளவு விஷயங்கள் சே க ரி ச் சு வச்சிருப்பீங்க போலிருக்கே?' என்று சொல்லிச் சிரித்தான் ரவி.

அது மட்டுமில்லிங்க, விவசாயத்திலே எப்படி நெல்லைப் போட்டா மறுபடி நெல்லு முளைக்குதோ அது மாதிரி ஒரு குடும்பத்திலே ஒருத்தர் அரசியல் வாதியா வந்து பதவியோட சுகம் கண்டுட்டா, நம்ம தேசத்திலே அப்புறமா அந்தப் பரம்பரையிலே யாரும் அரசியலையோ ப த வி ங் க ைள ேயா விடற்தே இல்லீங்களே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/126&oldid=579842" இலிருந்து மீள்விக்கப்பட்டது