பக்கம்:துளசி மாடம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 125


'எலிஃபண்ட் வேலிக்குப் போகலாம் னிங்களே ? நேரமாகலியா நாயுடுகாரு ?

வேணுமாமா நாயுடுவின் கவனத்தைத் திசை திருப் பினார். கமலியும் வசந்தியும் உடை மாற்றிக்கொண்டு புறப்படத் தயாராக வந்திருந்தார்கள். .

மறுபடி ஜீப்பில் புறப்பட்டார்கள் அவர்கள். 3. 'உங்க வீட்டிலேருந்து யாரையும் அருவியில் குளிக்கக் கூட்டிண்டு வரலியே நாயுடுகாரு ?' என்று ஜீப்பில் போகும்போது நாயுடுவைக் கேட்டார் வேனுமாமா.

'யாரு இருக்காங்க கூட்டியாறத்துக்கு ? குழந்தைங் கள்ளாம் ஸ்கூல், காலேஜ்னு ப்ளெய்ன்'ஸிலே படிச்சுக் கிட்டிருக்குதுங்க. என் மனைவி சீக்காளி. வெந்நீர்ல தான் குளிக்கும். அருவி கிருவி எல்லாம் அதுக்கு ஒத்துக் கிடாது.'

பத்துப் பன்னிரண்டு மைல் போனதும் ஒரு வளைவில் திரும்பி நின்றது ஜீப். நூறு நூற்றைம்பதடி கீழே பசும் புல் அடர்ந்த பெரிய பள்ளத்தாக்கும் நீர் நிறைந்த ஒர் ஏரியும் தெரிந்தன. ஏரிக்கரையில் புல் வெளியில் கருங் குன்றுகள் போல் உருவங்கள் அசைவது தெரிந்தது.

"அதோ பாருங்க... யானைக் கூட்டம்" என்று பைனாகுலரை உறையிலிருந்து எடுத்துக் கமலியிடம் நீட்டினார் நாயுடு.

1 |

கமலி, நாயுடு தன்னிடம் அளித்த பைனாகுலரை வாங்கிப் பார்த்தாள். பத்திருபது பெரிய யானைகள்... இரண்டு மூன்று குட்டி யானைகள்-பைனாகுலரில் மிக அருகில் நிற்பது போல் தெரிந்தன. அதிக நேரம் ஒர் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி. அவளைத் தவிர மற்றவர்கள் அங்கே பல முறை வந்திருந்த காரணத்தாலும், அடிக்கடி யானைக் கூட்டத் தைப் பார்த்திருப்பதாலும் அதில் அதிக ஆச்சரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/127&oldid=579843" இலிருந்து மீள்விக்கப்பட்டது