பக்கம்:துளசி மாடம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 துளசி மாடம்


ரவியும், கமலியும் சங்கரமங்கலம் திரும்பி வீட்டு வாசலில் காரிலிருந்து இறங்கும்போது பிற்பகல் நாலரை மணி. வருகிற வழியில் முதலிலேயே வேணுமாமாவும் வசந்தியும் தங்கள் வீட்டில் இ ற ங் கி க் கொண் டிருந்தார்கள்.

வீட்டு வாயிலில் சர்மா இறைமுடி மணியோடு பேசிக் கொண்டிருந்தார். ரவியை உற்சாகமாக வரவேற்றார் இறைமுடிமணி. கமலியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான் ரவி. இறைமுடிமணி'-என்ற பெயரைத் திருப்பி உச்சரித்துச் சொல்லிப் பார்க்க முயன்றாள் கமலி. அந்தப் பெயரைப் பற்றி விசாரித்தாள்.

அது தெய்வசிகாமணி'-என்ற பெயரின் தமிழ் மொழி பெயர்ப்பு என்பதை ரவி விளக்கினான்

“மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் போல் தானே இந்தப் பெயரும் ?’ என்று கமலி ரவியிடம் பதிலுக்கு வினவியபோது,

'அடேடே தமிழ்லகூட நல்லாப் பேசுறாங்களே ! உட்காருங்க தம்பி அவங்களையும் உ ட் க | ர ச் சொல்லுங்க" என்றார் இறைமுடிமணி. அவர் வேண்டிக் கொண்டவுடனே ரவி எதிர்த் திண்ணையில் உட்கார்ந் தான். கமலி உட்காரவில்லை. விசுவேசுவர சர்மா அங்கே இருப்பதைப் பார்த்து அவர் எதிரே அவள் உட்காரத் தயங்கினாற்போலப் பட்டது . சர்மாவும் அந்தத் தயக்கத்தைக் கவனித்தார். -

"நீங்க பேசிண்டிருங்கோ...நான் போய் மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வந்து ட .ே ற ன் - என்று சொல்லி விட்டு எழுந்திருந்து போனார் சர்மா. அவர் சென்றபின் எஞ்சிய மூவருக்கும் பலவற்றைத் தயங்காமல் பேசிக் கொள்வதற்கு உரிய சுதந்திரம் கிடைத்த மாதிரி இருந்தது. சர்மா சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கமலி ரவிக்கு அருகே மெல்ல ஒதுங்கி அமர்ந்து கொண்டாள், - -

"தமிழ் மட்டும் சொல்லிக் கொடுத்ததோட நிறுத்தி டாமே 'அவங்களுக்கு நம்ம பண்பாடுகளையும் பழக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/130&oldid=579846" இலிருந்து மீள்விக்கப்பட்டது